தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 27, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2026 04:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னாள் சபாநாயகரும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான தனபால்: ஏழு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனை மற்றும் வீட்டில் இருந்தேன். கட்சியில் இருந்து யாரும் வந்து என்னை பார்க்கவில்லை. அந்த கோபத்தில் என் மகன் த.வெ.க.,வுக்கு மாறி விட்டார். அது எனக்கு சங்கடம் தான். 2017ல், சபாநாயகராக இருந்த நான்தான், அ.தி.மு.க., அரசை காப்பாற்றி கொடுத்தேன். அ.தி.மு.க., விசுவாசியாகவே இருப்பேன்.

* டவுட் தனபாலு: அது சரி... 'நடுநிலையான சபாநாயகர் பதவியில் இருந்தாலும், அன்றைய ஆளும் அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஓட்டு போட்ட பன்னீர்செல்வம் அணியின், 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து, ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன்... அந்த நன்றியை அ.தி.மு.க., தலைமை மறந்துடுச்சு'ன்னு சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

***



முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா: அ.தி.மு.க., இதுவரை, 10 தோல்விகளை கண்டு, அழிந்து வருகிறது. இனியும் அமைதியாக இருக்கக் கூடாது என்பதால், புதிய கட்சியை துவங்க உள்ளேன். எதிரிகள், துரோகிகளின் வேர் அறுக்கும் கட்சியாக புதிய கட்சி செயல்படும். தற்போது, கட்சி கொடியை அறிமுகப்படுத்துகிறேன். கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கிறேன்.

* டவுட் தனபாலு: 'அ.தி.மு.க.,வை மீட்பேன்'னு சொல்லியே, ஒன்பது வருஷங்களை ஓட்டிட்டீங்க... அது முடியாம, இப்ப தனி கட்சி துவங்க போறீங்க... ஸ்டாலின், பழனிசாமி, விஜய்னு முதல்வர் கனவில் இருப்பவர்களின் துாக்கத்தை கெடுக்கவே, புதிய கட்சியை துவங்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

------



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு: 'தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி' என தொடர்ந்து பேசி வரும் த.வெ.க., தலைவர் விஜய், இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. கட்சி துவங்கிய ஆறாவது மாதத்திலேயே, திண்டுக்கல் தொகுதி லோக்சபா இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற இயக்கம், அ.தி.மு.க., என்ற வரலாறு விஜய்க்கு தெரியாது.

* டவுட் தனபாலு: அட, எம்.ஜி.ஆரை திரையில் மட்டுமே பார்த்திருக்கும் விஜய்க்கு, உங்க கட்சியின் வரலாறு எல்லாம் தெரியுமா என்பது, 'டவுட்'தான்... ஆனா, அவர் கூட இருக்கும் உங்க பழைய பங்காளி செங்கோட்டையனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குமே... அவர், அ.தி.மு.க.,வின் வரலாறு பத்தி விஜய்க்கு பாடம் எடுக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us