sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : மார் 09, 2026 01:44 AM

Google News

PUBLISHED ON : மார் 09, 2026 01:44 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேர்மையான அரசியல் தலைவர். அவரை ராஜினாமா செய்ய வைத்து, ராஜ்யசபாவுக்கு மோடி அரசு அனுப்புகிறது. இதேபோன்ற நிலை, தமிழகத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு வரக்கூடாது. பதவி ஆசைக்காகவும், சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆகியவற்றை வைத்து மிரட்டுவதாலும், பா.ஜ.,விடம் பழனிசாமி அடிபணிந்துள்ளார்.

டவுட் தனபாலு: சி.பி.ஐ., அமலாக்கத் துறையை விட்டு, மற்ற கட்சிகளை மிரட்டி வழிக்கு கொண்டு வரும் யுக்தியை கண்டுபிடிச்சதே காங்கிரஸ் தானே... 2011 சட்டசபை தேர்தல் சமயத்தில், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் சி.பி.ஐ.,யை விட்டு, 'ரெய்டு' நடத்தி, காங்., கட்சிக்கு 63 சீட்களை மிரட்டி வாங்கிய வரலாற்றை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: நம் கட்சியின் மகளிர் அணி கட்டமைப்பை வலுப்படுத்த, ஸ்பூர்த்தி அருண் தலைமையில், 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு, என் உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி, பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின்படி செயல்படும்.

டவுட் தனபாலு: உங்க கட்சியில் தினமும் ஒரு குழுவை போடுறீங்க... இந்த குழுவினர் எல்லாம் என்ன பண்றாங்க, யாரிடம் ஆலோசனை நடத்துறாங்கன்னே தெரியலையே... எல்லா கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கிட்ட சூழலில், உங்களது வீடு மற்றும் அலுவலகம் இருக்கும் சென்னை, நீலாங்கரையிலும், பனையூரிலும் மட்டும் கட்சியை நடத்திட்டு இருந்தா, உங்களது முதல்வர் கனவு பலிக்குமா என்பது, 'டவுட்'தான்!

தமிழக முதல்வர் ஸ்டாலின்: தி.மு.க., கூட்டணியில் புதிதாக பல கட்சிகள் இணைந்து, கூடுதல் வலிமையை பெற்றிருக்கிறோம். அதனால் தான், அரசியல் எதிரிகள், தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம் கூட்டணி உடையாதா என ஏங்கி கிடந்தனர். நம்மிடமிருந்து, 'அவர்கள் வெளியேறி விடுவர், இவர்கள் பிரிந்து போவர்' என்று கனவில் கணக்கு போட்டு, கற்பனை கோட்டைகளை கட்டினர். கூட்டணியை உடைக்க முயற்சி செய்தனர். அதை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்.

டவுட் தனபாலு: உங்க கூட்டணியை உடைக்க, வெளியில இருந்து யாரும் முயற்சி பண்ணலை... காங்.,கில் இருக்கும் சிலர் தான், விஜய் கட்சியுடன் அணி சேர ஆசைப்பட்டு, கூட்டணியை உடைக்க பார்த்தாங்க... இப்ப கூட்டணியை கட்டி காப்பாத்திட்டதால, அந்த பழியை எதிர்க்கட்சிகள் மீது போடுறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!






      Dinamalar
      Follow us