தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு

‘டவுட்’ தனபாலு

‘டவுட்’ தனபாலு

1


PUBLISHED ON : அக் 05, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 05, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன்: நாளை இடைத்தேர்தல் நடக்க உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், த.வெ.க., – தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளன. இந்த இடைத்தேர்தலில், மற்ற கட்சிகள் யாரும் மக்களை சந்திக்கவில்லை; மக்களிடம் அரசியல் பேசவில்லை; வெறுமனே தலைவர்கள் வந்து பேசிவிட்டு சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டும் தான் மக்களை சந்தித்து, தொகுதி பிரச்னைகள் குறித்து பேசினர்.

டவுட் தனபாலு: அது சரி... ‘மக்கள் பிரச்னைகளை எந்த கட்சிகளும் பேசவே இல்லை’ன்னு சொல்றீங்களே... தொண்டை தண்ணீர் வற்ற, தொகுதி பிரச்னைகளை பேசிய உங்களுக்கு எத்தனை ஓட்டுகள் விழுந்திருக்கு என்பது எண்ணிக்கையில், ‘டவுட்’ இல்லாம தெரிஞ்சிடும்... அதுக்கப்புறம் எந்த தேர்தலிலாவது தொகுதி பிரச்னைகள் பத்தி நீங்க பேசுவீங்களா என்பதும், ‘டவுட்’ தான்!

lll

காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: ராகுலுக்கும், விஜய்க்கும் நெருங்கிய நட்பு உள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்ததும், விஜயிடம் முதலில் பேசியது ராகுல் தான். ஜனநாயகன் படத்திற்கு நெருக்கடி ஏற்பட்ட போதும் ராகுல் கண்டனம் தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பே த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க ராகுல் விரும்பியும் நடக்கவில்லை.

டவுட் தனபாலு: விஜய்க்காக ராகுல் இவ்வளவு பார்த்து பார்த்து செஞ்சிருக்காரே... ஆனா, ‘2029 லோக்சபா தேர்தலில் ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்’னு, விஜய் வாயில் இருந்து இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட வரலையே... இது, உங்களுக்கு நெருடலாக இல்லையா என்ற, ‘டவுட்’ எழுதே!

lll

காங்., தமிழக நிர்வாகிகள்: வரும் 10ம் தேதி தமிழகம் வரும் ராகுல், சென்னை தீவுத்திடலில் நடக்கும், ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ராகுல் வருகைக்காக தமிழகம் முழுதும் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக நிதி திரட்டுவதில் நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர். ராகுல் வருகையை ஒட்டி, 60 லட்சம் ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பணம் வசூலிப்பதை பார்த்தால், 60 லட்சத்தை விட பல மடங்கு அதிகம் வரும் என தெரிகிறது; இதற்கு கணக்கு காட்டப்படுமா என்பது தெரியவில்லை.

டவுட் தனபாலு: அடடா... ராகுல் வருகையை காரணம் காட்டியே, ‘கல்லா’ கட்டும் வேலையில காங்கிரசார் இறங்கிட்டாங்களா...? அது இருக்கட்டும்... காங்., கட்சியினரை நம்பியும் கட்சி நிதி தர தமிழகத்தில் ஆட்கள் இருக்காங்களா என்ற, ‘டவுட்’ வருதே!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us