தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/'டவுட்' தனபாலு 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : அக் 04, 2026 01:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2026 01:59 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: 'தமிழகத்தில் சிறுபான்மையினரான நான் ஆட்சி அமைப்பேன்' என்பதே, பா.ஜ.,வுக்கு விஜய் கொடுத்த செய்தி. தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ., மட்டும் கிடைத்தது தான், த.வெ.க.,வுக்கு கிடைத்த பெரிய வெற்றி.

டவுட் தனபாலு: பா.ஜ.,வினர் சிவனேன்னு அவங்க வேலைகளை பார்த்துட்டு இருக்காங்க... வேலியில போற ஓணானை மடியில் எடுத்து விட்ட கதையா, தேசத்தையே ஆளும் கட்சிக்கு சவால் விடுறீங்களே... பா.ஜ.,வை அதிகமா சீண்டுனீங்க என்றால், மஹாராஷ்டிராவில் நடந்தது மாதிரி, உங்க

கட்சியிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகிடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!

வி.சி.க., தலைவர் திருமாவளவன்: பா.ஜ.,வை சீண்டும் வகையில், ஜோசப் விஜய் என்ற பெயரில் துணிச்சலாக அரசியலுக்கு வந்தவர் முதல்வர் விஜய். தேர்தலுக்கு முன், ஆர்.எஸ்.எஸ்., உடன் த.வெ.க.,வை தொடர்புபடுத்தி பேசியது தவறு என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன். 2009ல் மத்திய வனத்துறை அமைச்சர் பதவியை எனக்கு தர, காங்., தலைவர் சோனியா முடிவெடுத்ததாக வி.சி.க., பொதுச்செயலர் ரவிகுமாரிடம், அன்றைய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். ஆனால், நான் மத்திய அமைச்சராவது தடுக்கப்பட்டு விட்டது. கருணாநிதியின் உள்ளத்தில் இடம் இருந்தால் போதும் என இருந்து விட்டோம்.

டவுட் தனபாலு: கடந்த 1996ல், த.மா.கா., தலைவரா இருந்த மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தப்ப, தி.மு.க., தான் அதை தடுத்துட்டதா இன்னைக்கும் த.மா.கா.,வினர் குற்றம் சொல்லிட்டு இருக்காங்க... உங்களது மத்திய அமைச்சர் வாய்ப்பையும் தடுத்திருக்காங்க... அவ்வளவு ஏன்...? நடந்த முடிஞ்ச சட்டசபை தேர்தல்ல, நீங்க போட்டியிட முன் வந்தப்பவும் உங்களை தடுத்துட்டாங்க... இவ்வளவு துரோகங்களுக்கு பிறகும், தி.மு.க., கூட்டணியில் பல வருஷங்களா நீடிச்ச உங்க சகிப்பு தன்மையை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்!

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: 'த.வெ.க., ஆட்சி ஆறு மாதங்களில் கவிழும்' என கூறும் தி.மு.க.,வின் மனக்கோட்டை, மண் கோட்டையாக மாறும். ஐந்து ஆண்டுகள் முழுமையாக த.வெ.க., ஆட்சி நடக்கும்; வரும் 2031ம் ஆண்டிலும் விஜய் ஆட்சிக்கு வருவார்.

டவுட் தனபாலு: 'வர்ற 2031ம் ஆண்டும் விஜய் முதல்வராக வருவார்' என்பதை கூட, 'டவுட்' இல்லாம நம்பிடலாம்... ஆனா, அடுத்த அஞ்சு வருஷமும் த.வெ.க., கூட்டணியிலேயே நீங்க நீடிப்பீங்களா என்பது தான் இமாலய, 'டவுட்!'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us