தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு

‘டவுட்’ தனபாலு

‘டவுட்’ தனபாலு

3


PUBLISHED ON : அக் 03, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க., பொதுச்செயலரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த்: த.மா.கா., ஒரு அருமையான கட்சி. அந்த கட்சியின் தலைவர் வாசன் மரியாதைக்குரிய தலைவர்; பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்; மத்திய அமைச்சராகவும் இருந்தார்; ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சராகவும் இருந்தார். முதல்வர் விஜய்க்கு ஆதரவு தந்த த.மா.கா.,விற்கும், வாசனுக்கும் நன்றி.

டவுட் தனபாலு: வாசனை ஏகத்துக்கும் பாராட்டி தள்ளுறீங்களே... வாசன் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், அவரது அதிகபட்ச கோரிக்கை என்பது ராஜ்யசபா எம்.பி., பதவி தான்... அந்த வகையில், அடுத்து வர்ற ராஜ்யசபா தேர்தல்லயும், உங்க கட்சி தயவில் அவரை டில்லிக்கு அனுப்ப தயாராகிட்டீங்க என்பது, ‘டவுட்’ இல்லாம தெரியுது!

lll

மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம்: சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், தி.மு.க.,வின் ஆதரவோடு அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்தியது கம்யூனிஸ்ட்கள் தான். அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று தான், கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் போராடினோம்.

டவுட் தனபாலு: லோக்சபா தேர்தலில் நீங்க நினைச்சது நடக்கலைன்னாலும், சட்டசபை தேர்தலில் நடந்துடுச்சே... பா.ஜ.,வுக்கு எதிராகத் தானே த.வெ.க.,வும், காங்கிரசும் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைச்சிருக்காங்க... அப்படியிருந்தும், இடைத்தேர்தலில் அவங்களை ஆதரிக்காம, நீங்க தனித்து போட்டியிடுவது, யாரை ஏமாற்ற போடும் நாடகம் என்ற, ‘டவுட்’ வருதே!

lll

காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்: ‘மொபைல் போன்’ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் விவகாரத்தில், ‘இது அரசின் வரியல்ல; இந்திய தேசிய செலுத்துதல் கழகம் மற்றும் வங்கிகளின் முடிவு’ என, மத்திய அரசு தன் பொறுப்பை தட்டிக் கழிப்பது எவ்விதத்திலும் நியாயமல்ல. ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனையின் முதுகெலும்பாக விளங்கும் சிறு வணிகர்களை நசுக்கும் இந்த முடிவை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு: கடையில் ஒரு பொருளை வாங்கிட்டு, ஒரு நொடியில் மொபைல் போன் வழியா பணத்தை கட்டிட்டு வந்துடுறோம்... ஆனா, அதுக்கு பின்னாடி இருக்கும் பலரது உழைப்புக்கு ஊதியம் தர வேண்டாமா...? இதுவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தா, இந்த முடிவை எப்பவோ எடுத்திருப்பாங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us