தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 23, 2026 12:08 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 23, 2026 12:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி வெற்றிக்காக, தமிழகம் முழுதும் பிரசாரம் செய்ய உள்ளேன். என் பிரசார பயண திட்டத்தை, விரைவில் அறிவிப்பேன். 'இண்டி' கூட்டணியில் நான் சேர்ந்தபோது, 'இந்த கூட்டணி எதற்காக' என கேட்டு, நிறைய பேர் கிண்டல் செய்தனர். எனக்கு என்ன லாபம் என்பதை பற்றி யோசிக்காமல், என் கடமையாக, இதை செய்து கொண்டு இருக்கிறேன்.

டவுட் தனபாலு: விஜய் என்ற இளம் நடிகர் கட்சியை எதிர்த்து, மூத்த நடிகரான நீங்க தமிழகம் முழுக்க செய்ய போற பிரசாரம் பலனளிக்குமா என்பது, 'டவுட்'தான்... அதே நேரம், தி.மு.க., கூட்டணியால் உங்களுக்கு தான் லாபமே தவிர, அவங்களுக்கு எந்த லாபமும் இருக்குமா என்பதும், 'டவுட்'தான்!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் புதிய கட்சி துவக்கியுள்ள சசிகலா: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பா.ம.க., வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இணைந்து போட்டியிடும். தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சியையும் மேம்படுத்தும் விதமாக இக்கூட்டணி செயல்படும்.

டவுட் தனபாலு: தமிழகத்தில் ஏற்கனவே, தி.மு.க., - அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க., என்று நான்கு முனை போட்டி நிலவுது... இவங்க வேற களத்தில் குதிச்சு, அதை ஐந்து முனை போட்டியா மாத்திட்டாங்களே... ஆனாலும், ராமதாஸ் - சசிகலா கூட்டணி வேட்பாளர்களுக்கு, 'டிபாசிட்' தொகையாவது தேறுமா என்ற, 'டவுட்'தான் வருது!



பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழக குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ல், தமிழகத்தில் 19,965 தற்கொலைகள் நடந்துள்ளன. அவர்களில் 14,770 பேர் ஆண்கள்; 5,171 பேர் பெண்கள்; 24 பேர் திருநங்கையர். 71 சதவீத தற்கொலைகளுக்கு, ஏதோ ஒரு வகையில், மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம் தான் காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலங்களில், முதலிடத்தில் தமிழகம் உள்ளது. மது, கஞ்சாவை கொடுத்து தமிழகத்தை சீரழிக்கும் தி.மு.க.,வுக்கு, சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.

டவுட் தனபாலு: 'எல்லா துறைகளிலும் தமிழகம் நம்பர் 1' என, முதல்வர் ஸ்டாலின் பெருமிதமா விளம்பரம் செய்றாரே... தற்கொலைகள்லயும் தமிழகம் முதலிடத்தில் இருப்பது, அவரது மற்ற சாதனைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us