sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 27, 2026 03:14 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2026 03:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்தவரும், தற்போது தி.மு.க.,வில் உறுப்பினருமாக உள்ள ஓ.பன்னீர்செல்வம்: முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின், அவரது தோழி சசிகலா என்னை முதல்வராக்கினார். அவர் கூறியவுடன், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன். தரையில் ஊர்ந்து, சசிகலாவிடம் முதல்வர் பதவி பெற்ற பழனிசாமி, சசிகலா கணவர் இறந்த நேரத்தில், சிறையில் இருந்த சசிகலாவுக்கு பரோல் வழங்க மறுத்தார்.

டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் ஜெ., உயிருடன் இருந்தப்ப, ரெண்டு முறை முதல்வர் பதவியை பவ்யமா திருப்பி தந்த நீங்க, சசிகலா சொன்னதும் ராஜினாமா பண்ணலையே... அதை எதிர்த்து, ஜெ., சமாதியில் போய் தர்மயுத்தம் நடத்தினீங்களே... பழனிசாமியை தேர்வு செய்து, உங்களை விரட்டாத குறையா சசிகலா வெளி யேற்றிய வரலாறை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

பா.ம.க., தலைவர் அன்புமணி: ஹிமாச்சல பிரதேசத்தில், கடும் நிதி நெருக்கடியால், அம்மாநில அரசு ஊழியர்களுக்கு, 30 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்பட்டு உள்ளது. ஹிமாச்சலை விட மிக மோசமான நிலையில் தமிழக நிதி நிலை உள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தையே கடன் வாங்கிதான் தி.மு.க., அரசு வழங்கி வருகிறது. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திலும் அரசு ஊழியர்களின் சம்பளம், 50 சதவீதம் வரை குறைக்கப்படும்.

டவுட் தனபாலு: ஹிமாச்சல பிரதேசத்தில், காங்., ஆட்சிதான் நடக்குது... அவங்க கூட்டணி கட்சியான தி.மு.க.,வும், அவங்க வழியில் தான் பயணிக்குதுன்னு சொல்றீங்களா... ஆனாலும், 'எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய பா.ஜ., அரசு நிதி தர மறுப்பதால் தான் இந்த நிலை' என்று தி.மு.க., - காங்., கூட்டணி கட்சியினர், பதிலடி தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான்: தரங்கெட்டவர்களிடம் ஆட்சியை கொடுத்ததால், தரமில்லாத கல்வி மற்றும் தரமில்லாத மருத்துவமனைகள் இங்குள்ளன. அடிப்படை வசதி கூட இல்லாத நிலை உள்ளது. ஜாதி, மத உணர்ச்சியை துாண்டி, சாராயத்தை முதலீடாக வைத்து, நீண்ட காலமாக கொடுமையான ஆட்சியை நடத்தி விட்டனர்.

டவுட் தனபாலு: நீங்களும் ஒவ்வொரு தேர்தலுக்கும் காரசாரமாக பிரசாரம் செய்து, கணிசமான ஓட்டு வாங்கி விடுகிறீர்கள். ஆனால், ஆட்சியில் அமர இந்த பிரசாரமோ, நீங்கள் வாங்கும் ஓட்டோ பலனளிப்பதில்லை. ஆனால், மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயத்தை அழகாக எடுத்துச் சொல்கிறீர்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us