உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 20, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
சபரிமலையால் பெண்ணுக்கு பெருமை
சபரிமலை என்ற பெயர் வர காரணம் சபரி வாழ்ந்த மலை. ‘மசபரி’ என்று வால்மீகி குறிப்பிடுவதை கம்பர் தமிழ் ஒலிக்குறிப்பிற்கேற்ப ‘சவரி’ என்று காட்டினார். கம்பராமாயணத்தில் சவரி என்றழைக்கப்படும் வயதான பெண் துறவியை பற்றி 9 பாடல்கள் உள்ளன. ஆனால் கம்பர் இந்த 9 பாடல்களையே தனிப்படலமாக ‘சவரி பிறப்பு நீங்கு படலம்’ என்று அமைத்துள்ளார். ’இந்த படலம் ஆரண்ய காண்டத்தில் வருகின்றது. துளசிதாஸர் ‘‘ராம சரித மானஸ்” காவியத்தில் சபரியைக் காட்டுகிறார். அதில் சபரி செய்ததாக ஒன்பது வகையான பக்திகளைக் கூறுகிறார்.
