உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 10, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
கொறடா என்ற சொல்லுக்கு குதிரை சவுக்கு, ஏவுநர் என்ற அர்த்தங்கள் உள்ளன.
பார்லிமென்ட், சட்டசபை நடைமுறைகளில் 'கொறடா' பதவி முக்கியமானது. 1985ல் கட்சி தாவல் தடைச் சட்டம் வந்த பிறகு தான் 'கொறடா' பதவி முக்கியமானதாக மாறியது. சட்டசபை மற்றும் பார்லிமென்ட்டில் ஒவ்வொரு கட்சியும் உறுப்பினர்களை நெறிப்படுத்த அக்கட்சியை சேர்ந்த ஒருவரை நியமிக்கிறது. இவர் தான் கட்சிக் கொறடா எனப்படுகிறார். ஆளுங்கட்சியின் தலைமைக் கொறடாவாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் இருக்கிறார்.
