sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : ஏப் 05, 2026 03:07 AM

Google News

PUBLISHED ON : ஏப் 05, 2026 03:07 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சினிமா இயக்குநரும், மதுரை மத்தி தொகுதி புதிய நீதி கட்சி வேட்பாளருமான சுந்தர்.சி: இந்த களம் எனக்கு ரொம்ப புதுசு. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டு, இன்று பழனிசாமியால் வளர்க்கப்பட்டு கொண்டிருக்கும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். மதுரை மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கிறது. மதுரை மத்தி, தி.மு.க.,வின் பலம் வாய்ந்த தொகுதி; அமைச்சர் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். எனவே, போட்டி கடினமாகத்தான் இருக்கும்; போட்டியை பார்த்து ஒதுங்கி போக முடியாது.

* டவுட் தனபாலு: எதிராளியின் பலத்தை ஒப்புக்கொண்ட உங்க நேர்மையை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்... அதே நேரம், மதுரை மண்ணின் மைந்தனான தியாகராஜனை எதிர்க்க, பணத்தை தண்ணீரா வாரியிறைக்க வேண்டியிருக்கும்... உங்களுக்கு சீட் கொடுத்த கல்வி தந்தை ஏ.சி.சண்முகம், கணிசமான அளவுக்கு ரூபாய் நோட்டுகளையும் தந்தாரா என்ற, 'டவுட்'டும் வருதே!

தமிழக முதல்வர் ஸ்டாலின்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தான் ஒரு அறிவற்றவர் என்பதை, மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார். சசிகலா, பன்னீர்செல்வம் என பலருக்கு துரோகம் செய்து, முதுகில் குத்திய பழனிசாமி, இன்று, அ.தி.மு.க.,வை நான் உடைக்க நினைத்ததாக கூறுகிறார். அ.தி.மு.க.,வை அவர் தவறான பாதைக்கு கொண்டு செல்வதால், அக்கட்சியில் இருந்து விலகி, பலரும் தி.மு.க.,வில் இணைகின்றனர்.

* டவுட் தனபாலு: அது சரி... அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வில் சேர்ந்தவங்களுக்கு, உடனே எம்.எல்.ஏ., சீட், தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்துட்டா, வளமான துறைகளின் அமைச்சர் பதவி என்று, ஆடி தள்ளுபடி மாதிரி நீங்க அதிரடி சலுகைகளை வாரி விடுறதாலயே, அங்கிருந்து பலரும் தாவி வர்றாங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!

--------

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி, பெண்களுக்கான அரசாகவும், பெண்களை உயர்த்தக்கூடிய அரசாகவும் இருக்கிறது. மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையை மக்கள் திரும்பிக் கூட பார்க்கவில்லை. எந்த வாக்குறுதியை தி.மு.க., தந்தாலும், அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.

* டவுட் தனபாலு: அப்படியா...? காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம், மாதந்தோறும் மின் கட்டணம், பெட்ரோல் விலை குறைப்புன்னு கடந்த தேர்தல்களில் நீங்க தந்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவே இல்லையே... அதே கதி, தற்போது தந்த வாக்குறுதிகளுக்கும் ஆகாது என்பதை, 'டவுட்' இல்லாம சொல்ல முடியுமா?






      Dinamalar
      Follow us