sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 08, 2026 ,பங்குனி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஏப் 08, 2026 02:24 AM

Google News

PUBLISHED ON : ஏப் 08, 2026 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளராக, மீண்டும் நியமிக்கப் பட்டுள்ள பிரசாத்: 'என்ன தவறுக் காக என் பொறுப்பை பறித்தீர்கள்?' என, கேட்டு கொண்டிருந்தேன். ஆனால், நான் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், அதை ஏற்று பொறுப்பை திரும்ப வழங்கியதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். நான், கட்சி தலைவருக்கு மன்னிப்பு கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. தலைமையின் தவறான முடிவால், ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் எனக்கு, தற்போதைய அறிவிப்பு, கூடுதல் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

டவுட் தனபாலு: வழக்கமா, தி.மு.க., - அ.தி.மு.க.,வில் தான் பதவியை பறிச்சிட்டு திருப்பி தர்றப்ப, 'மன்னிப்பு கேட்டதால, பதவி குடுத்திருக்கோம்'னு அறிவிப்பாங்க... உங்க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர் என்பதால, பழக்க தோஷத்துல அப்படி அறிவிச்சிட்டாரோ என்ற, 'டவுட்' வருதே!



த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா: மாநில அரசியலுக்கு வருவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தோஷமாக அறிவித்தார். ஆனால், ஐந்து நாட்களுக்குள் அந்த முடிவை மாற்றும் வகையில், என்ன நடந்தது. அரசியலில் எதுவுமே தெரியாத உதயநிதி, துணை முதல்வராக இருக்கிறார். ஆனால், 40 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள திருமாவளவனை, மாநில அரசியலுக்கு வர விடாமல், தி.மு.க., தடுக்கிறது.

டவுட் தனபாலு: கட்சியிலும், ஆட்சியிலும் அசைக்க முடியாத சக்தியாக உதயநிதியை உருவாக்க தி.மு.க., தலைமை திட்டமிட்டு பணியாற்றுவதாக எதிர்க்கட்சி யினர் புகார் சொல்றாங்க... எதிர் காலத்தில் உதயநிதிக்கு போட்டி யாக யார் யாரெல்லாம் வருவாங்கன்னு இப்பவே கணக்கு எடுத்து, அவங்களை எல்லாம், தி.மு.க., களை எடுக்குதோ என்ற, 'டவுட்'தான் வருது!



---தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: திருச்செந்துார், திருவண்ணா மலை, திருப்பத்துார், ராதாபுரம், ராசிபுரம், பத்மநாபபுரம், ஆவடி என, தி.மு.க.,வின் கோட்டையாக உள்ள தொகுதிகள், பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. இயல்பாகவே இந்த முடிவுகள், அரசியல் ரீதியாக நியாயமானவையா என்ற கடும் சந்தேகத்தை, பா.ஜ., தொண்டர் களிடையே ஏற்படுத்தி உள்ளது.

டவுட் தனபாலு: நீங்க மட்டும் தமிழக பா.ஜ., தலைவராக இருந்திருந்தால், தோல்வி தொகுதிகளை வாங்கியிருக்க மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... இதுக்காகவே, தங்களது பழைய சகாவான, நயினார் நாகேந்திரனை, மாநில பா.ஜ., தலைவராக்கணும்னு அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தினாங்களோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!








      Dinamalar
      Follow us