sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஏப் 10, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2026 01:11 AM

2


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: 'பா.ஜ., - தி.மு.க., உடன்பாடு வைத்துள்ளது' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேசியது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில், பா.ஜ., காலுான்றக் கூடாது என்பதற்கான கொள்கைப் போரை நடத்தி கொண்டிருப்பவர், முதல்வர் ஸ்டாலின். பொறுப்பற்ற முறையில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாக, தி.மு.க.,வை இட்டுக்கட்டி பேசியதில், மம்தா பானர்ஜியின் அரசியல் அறியாமை தான் வெளிப்படுகிறது.

டவுட் தனபாலு: மம்தாவை விடுங்க... தமிழகத்தில், த.வெ.க., தலைவர் விஜயும், 'பா.ஜ.,வுடன், தி.மு.க., ரகசிய உறவு வச்சிருக்குது'ன்னு குற்றம் சாட்டுறாரே... அவரை மட்டும் நீங்க கண்டுக்காம இருப்பது ஏன்... தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, விஜய் தயவு தேவைப்பட்டாலும் படும் என்பதால், அவர் விஷயத்தில் அடக்கி வாசிக்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் சசிகலா: தமிழகத்தில் ஆட்சி நடத்துபவர்கள் சரியில்லை. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏமாற்றி, தி.மு.க., ஆட்களையே வைத்து மதுக்கடைகள் நடத்துகின்றனர்.

டவுட் தனபாலு: மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நடக்கும் மதுக்கடைகளுக்கு, உங்க குடும்பத்தினர் நடத்தும், 'மிடாஸ்' ஆலை தயாரிக்கும் மதுபானங்களை வாங்குறாங்களே... 'மனமகிழ் மன்றங்களுக்கு மது விற்பனை செய்ய மாட்டோம்'னு நீங்க அறிவித்தால், 'டவுட்' இல்லாம உங்களை பாராட்டலாம்!

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கடந்த, 2021 தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டேன்' என்றார். இதே கருத்தை தான் நானும் சொல்கிறேன்... முன்னாள் முதல்வர் கருணாநிதி எங்கள் எதிரியாக இருந்தாலும், கடைசி காலத்தில் அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டாரா என்பது குறித்து, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் விசாரிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்தாலும் விடமாட்டேன்.

டவுட் தனபாலு: முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற மறந்த பல வாக்குறுதிகளில், இதுவும் ஒன்று... அதே மாதிரி தான், நீங்களும் தேர்தலுக்காகவே இப்படி சவால் விடுறீங்க என்பதும், தப்பி தவறி நீங்க ஆட்சிக்கு வந்தாலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டீங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us