sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 03, 2026 ,சித்திரை 20, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : மே 03, 2026 01:22 AM

Google News

PUBLISHED ON : மே 03, 2026 01:22 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த.வெ.க., தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்: இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு தேர்தல் முடிவுகள் இருக்கும். உலக வரலாற்றில் விசில் சத்தம் கேட்பது இதுவே முதல் முறை. 200க்கும் அதிகமான தொகுதிகளில் த.வெ.க., வெற்றி பெற்று மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். அதன்பின் தான், தலைவர் விஜயின் மவுசு உலகத்துக்கே தெரிய வரும்.

டவுட் தனபாலு: உங்களது அபார தன்னம்பிக்கையை பாராட்டியே ஆகணும்... அதே நேரம், உங்க கட்சி சொற்ப தொகுதிகளில் மட்டுமே ஜெயித்து, ஆட்சி அமைக்க முடியலைன்னா, விஜய்க்கு மவுசு இல்லைன்னு உலகம் நினைச்சிடாதா என்ற, 'டவுட்' வருதே!

lll

பத்திரிகை செய்தி: த.வெ.க., வேட்பாளர்களை, அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அழைத்து பேசினார். அப்போது, 'ஓட்டு எண்ணிக்கை மையத்தில் காலை 6:00 மணிக்கே நீங்கள் இருக்க வேண்டும். வெற்றி சான்றிதழை வாங்கியதும் பனையூர் அலுவலகத்துக்கு வர வேண்டும்; வேறு எங்கும் செல்ல வேண்டாம். தேர்தலில் வெற்றி பெற்ற பின் என்னுடன் இருப்பீர்களா?' என கேட்டார். அனைவரும், 'கண்டிப்பாக இருப்போம்' என, பதில் அளித்தனர்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி போட்டியிட்ட இடைப்பாடி தொகுதியில், இவரது கட்சி வேட்பாளர் அருண்குமாரை அ.தி.மு.க.,வினர் வளைச்சு, த.வெ.க., போட்டியிடாம பண்ணிட்டாங்க... தேர்தலுக்கு முன்பே வேட்பாளரை, 'துாக்கியவங்க' ஜெயிச்சதும் எம்.எல்.ஏ.,க்களை, 'அள்ளிட்டு' போயிடுவாங்களோன்னு விஜய் பயப்படுவது, 'டவுட்' இல்லாம தெரியுது!

lll

பத்திரிகை செய்தி: தி.மு.க., அலுவலகமான அறிவாலயத்தில், துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து கேட்டறிந்தார். 'ஆட்சியில் பங்கு கேட்போம்' என, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் கூறிய கருத்து பற்றியும், அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசித்துள்ளார்.

டவுட் தனபாலு: தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காம, காங்., தயவில் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் வந்துடுமோன்னு முதல்வர் பயப்படுவது, 'டவுட்' இல்லாம தெரியுது... 2006 சட்டசபை தேர்தலில், 96 இடங்களில் மட்டுமே ஜெயித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தராமலே, ஐந்து ஆண்டு ஆட்சி நடத்திய ரகசியத்தை தன் மகனுக்கு சொல்லி தரலையோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!

lll






      Dinamalar
      Follow us