தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : மே 06, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2026 12:26 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி: மிதமிஞ்சிய ஊழல், மது, போதை, சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தினமும் கொலை மற்றும் கொள்ளை என, செயல்பாடற்ற அரசு நிர்வாகத்தின் மீது கோபம் கொண்ட இளைஞர்களும், தமிழக மக்களும், ஒரு தீர்க்கமான அரசியல் தீர்ப்பை வழங்கியுள்ளனர். நல்லாட்சி அமைக்க கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை, விஜய் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன்.

டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... நீங்க சொன்ன இந்த முக்கிய பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் விஜய் ஆட்சியில் தீர்வு கிடைச்சாலே, அது அவருக்கு பெரிய வெற்றிதான்... அதனால, அடுத்தடுத்த தேர்தல்களிலும், அவருக்கு வெற்றி கிடைக்கும் என்பதிலும், 'டவுட்' இல்லை!

பத்திரிகை செய்தி: முதன் முதலாக தேர்தல் களம் கண்ட விஜய், அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர், விஜய்க்கு நெருக்கமானவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். விஜய் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் மொபைல் போன் எண்களை, செய்தியாளர்களிடம் கேட்டு வாங்கியுள்ளனர். விஜய் அரசில், முக்கிய பதவிகளை பிடிப்பதற்கு, காய் நகர்த்தி வருகின்றனர்.

டவுட் தனபாலு: அது சரி... யார் முதல்வராக இருந்தாலும், ஆட்சியை நடத்த போறது அதிகாரிகள் தான்... நிர்வாகத்தில் குளறுபடிகள் நடந்தால், அதிகாரிகளை யாரும் குறை சொல்ல மாட்டாங்க... 'விஜய் ஆட்சி சரியில்ல'ன்னு தான் விமர்சிப்பாங்க... அதனால இந்த மாதிரி, 'காக்கா' அதிகாரிகளிடம் இருந்து விலகி இருப்பதே விஜய்க்கு நல்லது என்பதில், 'டவுட்'டே இல்லை!

அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் சசிகலா: இந்த தேர்தலில், எனது பிரதான கோரிக்கையை மக்கள் அங்கீகரித்துள்ளனர். அதாவது, எதிரிகளும், துரோகிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர். தி.மு.க., மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தமிழக வரலாற்றிலேயே, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள, த.வெ.க., தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள்.

டவுட் தனபாலு: தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் வீழ்த்தப்பட்டும், அவங்களுக்கு எதிராக களம் கண்ட உங்க கட்சியினர் ஒருத்தர் கூட ஜெயிக்கலையே... ஆனாலும், காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக, விஜய்க்கு கிடைச்ச வெற்றியே என்னால்தான்னு சொல்றது சரியா என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us