sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்: தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு ஜெயித்த நாங்கள், த.வெ.க., அமைச்சரவையில் சேர்ந்திருப்பதை, தி.மு.க.,வினர் விமர்சிக்கின்றனர். முஸ்லிம் சமுதாய ஓட்டுகள் இல்லாமல் தி.மு.க.,வால், 59 இடங்களில் வென்றிருக்க முடியாது. எனவே, அமைச்சரவையில் சேர்ந்த எங்கள் முடிவை விமர்சிக்கும் உரிமை, யாருக்கும் இல்லை. யாராவது விமர்சித்தால், அது முட்டாள்தனமானது; போக்கிரித்தனமானது.

டவுட் தனபாலு: மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, கருணாநிதி காலங்களில் இருந்தே, தி.மு.க.,வின் சார்பு அணி மாதிரிதான் நீங்க செயல்பட்டீங்க... உங்க கட்சிக்கு ஒன்றிரண்டு சீட்களை மட்டும் குடுத்துட்டு, தமிழகம் முழுக்க முஸ்லிம் ஓட்டுகளை அறுவடை பண்ணிய, தி.மு.க.,வினர், அந்த நன்றியை மறந்துட்டாங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!

lll



தி.மு.க., இளைஞரணி தீர்மானம்: அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும், காங்கிரசுக்கு புதிதல்ல. இன்று நமக்கு செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வர். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள் தான் காங்கிரசார். தி.மு.க., ஆட்சியமைக்க விரும்பிய மக்களின் ஓட்டுகளால் தான், இன்று அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனரே தவிர, சொந்த செல்வாக்கால் அல்ல.

டவுட் தனபாலு: காங்கிரசாரை இப்படி போட்டு தாக்குறீங்களே... நீங்க சொல்ற மாதிரி, சொந்த செல்வாக்கு இல்லாத காங்கிரசார், த.வெ.க., கூட்டணிக்கு போக தயாரானப்ப, டில்லி வரைக்கும் ஓடோடி போய் ராகுலிடம் கெஞ்சாத குறையா பேசி, கூட்டணியில் தக்க வச்சது ஏன் என்ற, 'டவுட்' வருதே!

lll

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தி.மு.க.,வும், நாங்களும் கொள்கை பிடிப்போடு பணியாற்றினோம். த.வெ.க., அமைச்சரவையில் சேரும் எங்கள் முடிவுக்கு, அரசியல் நெருக்கடியே காரணம்; எங்களுக்கு பதவி ஆசை இல்லை. எங்கள் முடிவை தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர், எதிராக பார்க்கவில்லை. அவர்கள் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

தனபாலு: அரசியலில் கூட்டணி எல்லாம், தேர்தல் சமயத்தில் மட்டும் தான்... எல்லாத்துக்கும், தி.மு.க.,விடம் கேட்டு தான் முடிவு எடுக்கணும்னா, வி.சி.க.,ன்னு ஒரு கட்சியை நீங்க தனியா நடத்தணுமா என்ற, 'டவுட்'தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us