sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூன் 02, 2026 12:23 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 02, 2026 12:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை நடத்தி காட்டுவது தான், முதல்வர் விஜயின் லட்சிய பயணமாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் நாங்கள் அனைவரும், பணிகளை தெளிவோடு நடைமுறைப் படுத்த உள்ளோம்.

டவுட் தனபாலு: நல்லது... முதலில், நிதித் துறைக்கு தானே உங்களை அமைச்சரா நியமிச்சாங்க... வெறும் கவுரவம் மட்டுமே கிடைக்கிற அந்த பதவியை வேண்டாம்னு மறுத்து, ஏகப்பட்ட பணம் புழங்கும் வருவாய்த் துறையை கேட்டு வாங்கிட்டு இப்படி, 'டயலாக்' பேசுவது சரியா என்ற, 'டவுட்'தான் வருது!

----

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: கடந்த 2009-ல், ம.தி.மு.க., - - எம்.எல்.ஏ.,வாக இருந்த கம்பம் ராமகிருஷ்ணன், அ.தி.மு.க.,வில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க.,வில் இணைந்து இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வாகினர். அன்று அவர்கள் செய்ததை தான் இன்று, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க் களாக இருந்த நால்வரும் செய்துள்ளனர். அப்போது யாரும் விமர்சனம் செய்யவில்லை. அவர்கள் காட்டிய வழியை அ.தி.மு.க.,வினர் பின்பற்றியுள்ளனர். நான் இதை ஆதரிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை.

டவுட் தனபாலு: உங்க கூட்டணி தலைமையான தி.மு.க., இந்த சம்பவத்தை குதிரை பேரம்னு கடுமையா விமர்சனம் பண்ணிட்டு இருக்குது... நீங்க, அதுக்கு மாறா கருத்து சொல்றதும் இல்லாம, தி.மு.க.,வே குதிரை பேரத்தில் ஈடுபட்டதுன்னும் நாசுக்கா குத்திக்காட்டுறதை பார்த்தா, தி.மு.க., கூட்டணிக்கு டாட்டா காட்ட முடிவு பண்ணிட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

--------

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன்: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். இது, அ.தி.மு.க.,வை உடைப்பதாக தெரியவில்லை; இது குதிரை பேரமும் இல்லை. வரும் இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை கட்சி நிர்வாக குழு முடிவு செய்யும்.

டவுட் தனபாலு: த.வெ.க., அரசில் உங்க கட்சி சார்பில் ஒருத்தர் அமைச்சராகியிருக்காரு... அப்படியிருக்கிறப்ப, இடைத்தேர்தலில் அந்த கூட்டணியில் தானே நீங்க சேர முடியும்... அதை விடுத்து, பழைய பாசத்துல, தி.மு.க., கூட்டணின்னு முடிவு எடுத்தா, அந்த அமைச்சர் பதவிக்கு பங்கம் வந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us