sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

5


PUBLISHED ON : ஜூன் 03, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2026 12:06 AM

5


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா: நாங்கள் எந்த, 'சோபா செட்'டுக்கும் ஆசைப்படாமல், தி.மு.க., கூட்டணிக்கு விசுவாசமாக உள்ளோம். நான் நினைத்திருந்தால், நான் ஒரு வார்த்தை கேட்டிருந்தால், முதல்வர் விஜய் வீடு தேடி வந்து, துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். ஆனால், தே.மு.தி.க., அதற்கெல்லாம் ஆசைப்படாது.

டவுட் தனபாலு: 'நெனப்பு தான் பொழப்பை கெடுத்துச்சாம்'னு கிராமங்கள்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க... அதுக்கு, அரசியல்ல சரியான உதாரணம் நீங்க தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதல்வருமான விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார்; திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நால்வர் ராஜினாமா செய்ததால், ஐந்து தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், திருச்சி கிழக்கில், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் இனிகோ இருதயராஜுக்கு மட்டும் சீட் ஒதுக்கிவிட்டு, மற்ற நான்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டவுட் தனபாலு: சரியா போச்சு... 75 வருஷம் பாரம்பரியம் கொண்ட தி.மு.க., முழுசா மூணு வயசு கூட நிரம்பாத த.வெ.க.,வை பார்த்து பயந்து, களத்தில் இருந்து ஓடிட்டதா அவதுாறுகள் கிளம்புமே... அதேநேரம், மறுபடியும் த.வெ.க.,விடம் தோற்று அவமானப்படுவதை விட, இதுவே பரவாயில்லைன்னு நினைச்சிட்டாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: திருவள்ளுவர் அனைத்தையும் கடந்தவர். அத்தகைய திருவள்ளுவருக்கு, திமிர் பிடித்த சர்வாதிகாரியான தமிழக கவர்னர், காவி ஆடை போர்த்தியதை மன்னிக்க முடியாது. திட்டமிட்டு, நம்மை உசுப்பி பார்ப்பது போல் ஆணவத்துடன் இதை செய்துள்ளார். இது தொடருமானால், கவர்னர் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் ம.தி.மு.க., கருப்புக் கொடி காட்டும்.

டவுட் தனபாலு: வழக்கமா, இந்த மாதிரி விவகாரங்கள்ல ஆவேசம் காட்டும் தி.மு.க.,வே அடக்கி வாசிக்கிறப்ப, நீங்க ஓவரா உணர்ச்சிவசப்படுறீங்களே... அது சரி... 'கவர்னர் எங்க போனாலும் கருப்புக் கொடி காட்டுவோம்'னு சொல்ற உங்க கட்சிக்கு, எல்லா மாவட்டங்கள்லயும் தொண்டர்கள் இருக்காங்களா என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us