தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஜூன் 05, 2026 12:10 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2026 12:10 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: பெண் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தில், த.வெ.க., நிர்வாகிகள் இருவர் கைதாகி இருப்பது, துாத்துக்குடி மாவட்டத்திற்கே தலைகுனிவு. பெண்களுக்கு பிரச்னை ஏற்படுத்துவோர், கஞ்சா விற்பனை செய்வோர் எல்லாம், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அந்த கட்சியில் தான் இருக்கின்றனர். இதற்கு அவரது தலைவர் என்ன பதில் சொல்லப் போகிறார்.

டவுட் தனபாலு: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஞானசேகரன் எல்லாம் உங்க கட்சியில் இருந்தவங்க தானே... இப்ப, கைதானவங்க பின்னணியை தோண்டி துருவினா, ஒரு காலத்துல உங்க கட்சியில் இருந்திருப்பாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: தி.மு.க., கூட்டணியில் உறுதியாக இருந்து பிரசாரம் செய்தேன். தி.மு.க., ஓட்டுகள் கிடைத்து, இரு தொகுதிகளில் ம.தி.மு.க., வென்றது. தி.மு.க.,வின் வெற்றிக்கும் ம.தி.மு.க., உதவி செய்துள்ளது. கூட்டணியில், தே.மு.தி.க., - வி.சி.க., - காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டன. எங்கள் சின்னத்திலேயே போட்டியிட்டு இருக்கலாம் என்ற ஆதங்கத்தில் தொண்டர்கள் இருக்கின்றனர்.

டவுட் தனபாலு: அது சரி... 10 தொகுதிகளை வாங்கி, தனி சின்னத்தில் போட்டியிட்ட தே.மு.தி.க., ஒன்றில் தான் ஜெயிச்சிருக்குது... தி.மு.க., சின்னத்தில் நின்றதால் தான், நாலுக்கு இரண்டிலாவது ஜெயிச்சிருக்கீங்க... நீங்களும் தனி சின்னம்னு போயிருந்தால், இதுவும் தேறியிருக்குமா என்பது, 'டவுட்'தான்!

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் சபாநாயகர் அப்பாவு: ஊழலை ஒழித்து விட்டதாக முதல்வர் விஜய் தம்பட்டம் அடிக்கிறார். முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஆறே நாட்களில், புஷ்பா பட பாணியில், 'சோபா செட்' வாயிலாக அ.தி.மு.க.,வின் ஒரு பிரிவை தன்வசப்படுத்தினார். பலமுறை ஆட்சியில் இருந்த அந்த கட்சியை உடைத்து, 25 எம்.எல்.ஏ.,க்களை தங்களுக்கு சாதகமாக ஓட்டு போட வைத்தார். இதுதான் ஊழல் ஒழிப்பா?

டவுட் தனபாலு: அடடா... தி.மு.க., ஆட்சியை வீழ்த்தி, விஜய் ஆட்சிக்கு வந்திருக்காரே... உங்க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியதே பெரிய ஊழல் ஒழிப்புதான்னு விஜய் நினைச்சிருப்பாரோ என்ற, 'டவுட்'தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us