தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூன் 19, 2026 01:31 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2026 01:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால், நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது, மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் கட்சியில் இருந்து விடை பெற்றாலும், என் மண்ணுக்கான, மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம் போல தொடரும்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., தலைமை மீது அதிருப்தியாகி, விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நாலு முறை ஜெயித்த எம்.எல்.ஏ., பதவியை உதறி தள்ளியிருக்கீங்க... ஐந்தாவது முறையா அங்க, த.வெ.க., சார்பில் போட்டியிடப் போறீங்களா அல்லது தி.மு.க., வேட்பாளராக களமிறங்கப் போறீங்களா என்ற, 'டவுட்' வருதே!

காங்., கட்சியைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார் கூட்டறிக்கை: 'காங்கிரஸ் மேலிட தலைவர் ராகுல் துரோகம் செய்து விட்டார்; கூட இருந்தே குழி பறித்து விட்டார்' என்றெல்லாம், தி.மு.க., பத்திரிகையான, 'முரசொலி'யில் தினந்தோறும் வசைபாடி வருகின்றனர். கூட்டணி கட்சிகள் மீது பழி சுமத்தி, கொச்சையாக விமர்சித்து கொண்டே இருந்தால், தி.மு.க., இனி எப்போதும் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும்.

டவுட் தனபாலு: தி.மு.க., பத்தி உங்களுக்கு தெரியாதா...? 1977ல், உங்க கட்சியின் முன்னாள் பிரதமர் இந்திரா மீது மதுரையில் கொலைவெறி தாக்குதல் நடத்தினாங்க... 1980ல், அதே இந்திராவை, 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக'ன்னு வரவேற்கலையா... அந்த மாதிரி, நாளைக்கே கூட்டணி மாறினா, ராகுலுக்கும் வாழ்த்து பாடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: த.வெ.க., அரசு அமைந்த பின், 'கமிஷன்' என்ற பேச்சுக்கே இடமில்லை. 'கமிஷன், கரப்ஷன்' இல்லாமல் முதல்வர் விஜய் அரசு இயங்குகிறது. ஆரோக்கியமான நிர்வாகம் உள்ளது. த.வெ.க., கூட்டணியில் ம.தி.மு.க., சேருமா என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைக்காது. ம.தி.மு.க., பொதுக்குழுவில் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.

டவுட் தனபாலு: 'கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா?'ன்னு கிராமங்கள்ல சொல்லுவாங்க... அந்த மாதிரி, தி.மு.க., கூட்டணியில் இருந்துட்டே, விஜயை அடிக்கடி சந்திக்கிறதும், அவர் ஆட்சியை புகழ்ந்து பேசுவதும், நீங்க கூட்டணி மாற தயாராகிட்டீங்க என்பதை, 'டவுட்'டே இல்லாம வெளிச்சம் போட்டு காட்டுது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us