தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூன் 24, 2026 01:05 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2026 01:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம். எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன் :

நான் ஒரு வியாபாரி. என் கடைக்கு வருகிறவன், கடனுக்கு பொருள் வாங்க வருகிறானா; பணத்தோடு வருகிறானா என்பது எனக்கு தெரியும். அதேபோல், சட்டசபைக்கு வந்த முதல்வர் விஜயின் நிலை என்ன என்பதை என்னால் அறிய முடிந்தது. 'என்னை இப்படி மாட்டி விட்டு விட்டீர்களே' என்பது போல் அவர் இருந்ததை உணர முடிந்தது.

டவுட் தனபாலு:

அது சரி... 75 வருஷங்கள் பாரம்பரியம் கொண்ட உங்க கட்சியால, தமிழக சட்டசபையில் கவர்னரை சுமுகமா உரையாற்ற வைக்க முடியலையே... அரசியலுக்கும், ஆட்சிக்கும் ஜூனியரான த.வெ.க., முதல் கவர்னர் உரையை வெற்றிகரமா நடத்தி முடிச்சிருக்கே... உங்களிடம் விஜய் மாட்டிக்கல; நீங்க தான், அஞ்சு வருஷம் விஜய்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க போறீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

----

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:

கடந்த 2015ல் நாங்கள் விதைத்த, 'கூட்டணி ஆட்சி' என்ற கருத்தில் உருவானது தான், மக்கள் நல கூட்டணி. இதனால், 2016 தேர்தலில் தி.மு.க.,வால் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. அப்போது, 'மக்கள் நல கூட்டணியை உருவாக்கி தி.மு.க.,வை ஆட்சிக்கு வர விடாமல் திருமாவளவன் தடுத்து விட்டார்' என பழி சுமத்தினர். இப்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் இசைவு பெற்று தான் வெளியே வந்து, த.வெ.க., அரசை ஆதரிக்கிறோம்.

டவுட் தனபாலு:

'ஸ்டாலின் உத்தரவுப்படியே த.வெ.க., அரசை ஆதரிக்கிறோம்'னு சொல்றீங்களே... நாளைக்கே ஸ்டாலின் உத்தரவு போட்டா, அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கவும் தயங்க மாட்டீங்களோ என்ற, 'டவுட்' வருதே!

---------

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:

மேம்படுத்தப்பட்ட நடுத்தர ரக போர் விமான திட்டம், ஓசூரில் 2,500 கோடி ரூபாயில் அமைய இருந்தது. தற்போது, ஆந்திராவிற்கு போய் விட்டது. இதுபோல் பல முதலீடுகள் ஆந்திரா செல்கின்றன. தன் அரசை பாதுகாக்க, பல கட்சிகளில் இருந்தும் ஆட்களை பிடித்து வர பயன்படுத்தும் மாயாஜால மந்திர சக்தியை, மாநில நலன் சார்ந்த பிரச்னைகளை தீர்க்க முதல்வர் விஜய் பயன்படுத்துவாரா?

டவுட் தனபாலு:

த.வெ.க., வில் மாற்று கட்சியினர் நிறைய பேர் சேர்ந்தாலும், உங்க கட்சியில் இருந்து தான் கொத்து கொத்தா அங்க போய் இணையுறாங்க... முதல்ல உங்க கட்சியினருக்கு அணை போடும் வழிகளை பாருங்க... அப்புறமா, ஆளுங்கட்சியை விமர்சிக்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us