தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

4


PUBLISHED ON : ஜூலை 01, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2026 12:27 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்:


செல்வப் பெருந்தகை, சிதம்பரம், கார்த்தி, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, அழகிரி, செல்லகுமார், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் என, அனைத்து தரப்பு தலைவர்களையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து, அவர்களின் ஆலோசனைகளை கேட்டு, அவர்கள் பங்களிப்பு டன் கட்சி பணிகளை மேற்கொள்வேன். காங்கிரஸ் கட்சியை சீண்டுகிறவர்களை திருப்பி அடிப்போம். எங்கள் கொள்கை எதிரிகளை வீழ்த்த ஒரே கோஷ்டியாக, ராகுல் கோஷ்டியாக, 'ஒரே தீம், ஒரே டீம் ' என்ற அடிப்படையில் செயல் படுவோம்.

டவுட் தனபாலு:


நீங்க பட்டியல் போட்ட ஒன்பது தலைவர்களும், நவகிரகங்கள் மாதிரி ஆளுக்கொரு அணியா செயல்படுறவங்க... கஷ்டப்பட்டு உழைச்சா தமிழகத்தில் காங்., ஆட்சியை கூட அமைச்சிடலாம்... ஆனா, உங்க கட்சியின் கோஷ்டி தலைவர்களை எல்லாம் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியுமா என்பது, 'டவுட்'தான்!

----

வி.சி.க., தலைவர் திருமாவளவன்:


வெள்ளை அறிக்கை என்பது, கடந்த கால ஆட்சியில் இருந்த நிதி நிலைமை குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பது மட்டுமே. அதை த.வெ.க., அரசு வெளிப்படையாக அறிவிப்பதால், ஜனநாயகத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவதாக கருதுகிறேன்.

டவுட் தனபாலு:


தமிழக அரசு வெளியிடும் வெள்ளை அறிக்கைகளில், கடந்த காலத்தில் நீங்க விழுந்து விழுந்து ஆதரித்த தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேடுகள், ஊழல்களை எல்லாம் அம்பலப்படுத்துறாங்களே... அதை வரவேற்று பாராட்டுவதை பார்த்தால், தி.மு.க., அரசு ஊழல் செய்தது உண்மைதான்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

-----

தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி:


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், ஆளுங்கட்சியில் சேரப்போவதாக தினமும் செய்திகள் வருகின்றன. இவ்வளவு நாள் ஊழல் சக்தியாக இருந்த அவர், இனிமேல் துாய சக்தியாக மாறி விடுவார். இதுதான் இந்த அரசின் ஊழல் ஒழிப்பு லட்சணம்.

டவுட் தனபாலு:


அ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரை தான் சொல்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதே நேரம், கரூர் செந்தில் பாலாஜியை ஊழல் பேர்வழின்னு கடுமையாக விமர்சித்த உங்க அப்பா ஸ்டாலின், அப்புறம் அவரை உங்க கட்சியில் சேர்த்துக்கிட்டதை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us