தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூலை 06, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2026 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 1.72 கோடி பேர் ஓட்டு போட்டு, தி.மு.க.,வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். மக்கள் விரும்பிய இந்த ஆட்சி மாற்றத்தை தி.மு.க.,வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆட்சியில் இல்லாமல் தி.மு.க.,வால் இருக்க முடியவில்லை. அதனால், எப்படியாவது த.வெ.க., ஆட்சியை கவிழ்த்து விட்டு, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் நோக்கில் தி.மு.க., குதிரை பேரத்தில் இறங்கி உள்ளது.

டவுட் தனபாலு: சாதாரண கவுன்சிலர் பதவியை இழந்தவர் கூட, அடுத்து எப்படா அந்த பதவியில் அமரலாம்னு துடியா துடிக்கிற காலம் இது... அப்படி இருக்கிறப்ப, ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆளும் வாய்ப்பை, புதுசா முளைச்ச கட்சியிடம் பறிகொடுத்தவங்க சும்மா இருப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!

அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி: தி.மு.க., எனும் தீயசக்தியை ஒழிக்க அல்லும் பகலும் பாடுபட்ட பழனிசாமியை, தி.மு.க.,வோடு இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். சுயநலத்துக்காக அ.தி.மு.க.,வை காட்டி கொடுத்து, மனசாட்சிக்கு விரோதமாக அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி, அ.தி.மு.க., தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்க முடியாது.

டவுட் தனபாலு: த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 35 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில், தி.மு.க.,வினருடன் உங்க கட்சிக்காரர் ஒருத்தரும் கைதாகியிருக்காரே... 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற கதையாக, இதுவே உங்களது கள்ள கூட்டணியை அம்பலமாக்கிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!

தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: 'இன்னும் 30 நாட்கள் தான் இந்த ஆட்சி இருக்கும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எந்த தைரியத்தில் கூறினார். பணத்தால் எதையும் வாங்கலாம் என்று அவர் நினைக்கிறார். அனைத்து வழியிலும் த.வெ.க., அரசுக்கு அவர் தொல்லை கொடுத்து வருவதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். வரும் காலத்தில் மக்கள் தீர்ப்பு இன்னும் கடுமையாக இருக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தப்ப, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல், தி.மு.க., மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது... 'அந்த நிலை மறுபடியும் வந்துடும்'னு தி.மு.க.,வை நீங்க எச்சரிப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us