தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : ஜூலை 13, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 13, 2026 12:21 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்: தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, பின்னோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், திருப்பூரில் 9; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 2; உசிலம்பட்டியில் 3; நீலகிரியில் 3 பள்ளிகள், மாணவர்கள் வருகையின்றி மூடப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில், 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும்.

டவுட் தனபாலு: 'அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் சிறப்பு'ன்னு வசனம் பேசியே கடந்த தி.மு.க., ஆட்சியில் காலத்தை ஓட்டிட்டு போயிட்டாங்க... புதிய த.வெ.க., அரசு, பள்ளிகளை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால், 'டவுட்'டே இல்லாம அவங்களை பாராட்டலாம்!



வி.சி.க., தலைவர் திருமாவளவன்: சட்டசபை தேர்தலில், பட்டியலின மக்களின் ஓட்டுகள் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு சென்றதாக கூறுகின்றனர். அனைத்து சமூக ஓட்டுகளையும் விஜய் பெற்றுள்ளார். 59 தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற்றதில் வி.சி.க.,வின் பங்கு முக்கியமானது. ஆயினும், தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க., ஆராயவில்லை.

டவுட் தனபாலு: உங்க வாதப்படியே, 59 தொகுதிகளில் தி.மு.க., பெற்ற வெற்றியில் உங்க கட்சியின் பங்களிப்பு இருந்திருந்தால், அவங்க உங்களுக்கு தந்த எட்டு தொகுதிகளில், வெறும் ரெண்டில் மட்டும் தானே நீங்க ஜெயிச்சீங்க... 59 தொகுதிகளில் தி.மு.க.,வை ஜெயிக்க வைத்த உங்களால், உங்களது ஆறு தொகுதிகளில் ஏன் ஜெயிக்க முடியலை என்ற, 'டவுட்' வருதே!

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஆண்டுதோறும் தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்க வேண்டும் என, கர்நாடக ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். நமக்குரிய நீரை திறந்து விட, கர்நாடக அரசை தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்த வேண்டும். 'காவிரியில் நம் பங்கு நீரை காங்., அரசு தராவிட்டால், தமிழக அமைச்சரவையில் இருந்து காங்., அமைச்சர்கள் விடுவிக்கப்படுவர்' என எச்சரிக்க முதல்வர் விஜய் தயாரா?

டவுட் தனபாலு: மத்திய பா.ஜ., அரசின் தே.ஜ., கூட்டணியில் தானே நீங்க இருக்கீங்க... அதனால, 'தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிடுங்க'ன்னு, மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கலாமே... உங்களை யார் தடுக்கிறாங்க என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us