தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூலை 15, 2026 12:37 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2026 12:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு: இதயம் மற்றும் வயிற்று பிரச்னை காரணமாக, 2016ல் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். 2023ம் ஆண்டிலும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று திரும்பினேன். தற்போதும் அங்கு சிகிச்சைக்கு சென்று திரும்பியுள்ளேன். என் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக, அவர்களது விசாரணைக்கு ஆஜராக உள்ளேன். நான் ஓடவும் இல்லை; ஒளியவும் இல்லை.

டவுட் தனபாலு: தமிழகத்தில் இருக்கும் பிரபல மருத்துவமனைகளை தேடி, வெளிநாடு களில் இருந்து தினமும் நிறைய பேர் சிகிச்சைக்கு வர்றாங்க... திருவண்ணாமலையில் சொந்தமா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நடத்தும் நீங்க, சிகிச்சைக்காக வெளிநாடு போனதை நம்ப முடியலையே... உங்க மருத்துவமனையின் வசதிகள் மற்றும் டாக்டர்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையோ என்ற, 'டவுட்' தான் வருது!

*****

வி.சி.க., தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில் மக்களுக்காக போராடும் இயக்கமாக உள்ளதால், வி.சி.க.,வை எந்த சக்தியாலும் உரசிப் பார்க்கவோ, சீண்டிப் பார்க்கவோ, உடைக்கவோ முடியாது. வி.சி.க.,வை பலவீனப்படுத்தும் நிலைப்பாட்டை, நீண்ட நெடிய பயணம் கொண்ட ஓர் இயக்கம் தொடங்கிய போது, இதயத்தில் முள் குத்தியது போல் எனக்கு வலித்தது.

டவுட் தனபாலு: நீங்க, தி.மு.க.,வை தான் சொல்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... சட்டசபை தேர்தலப்ப, புதுசா கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகளும், உங்க கட்சிக்கு எட்டு தொகுதிகளும் கொடுத்தப்பவே, இது உங்களுக்கு புரியலையா என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது!

***

பா.ம.க., தலைவர் அன்புமணி: ஆட்சியில் இல்லை என்றாலும், மக்களுக்காக களமிறங்கி போராடுவதில், பா.ம.க., தான் உண்மையான எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனாலும், ஓர் அரசியல் கட்சி, மக்களின் உரிமைகளை போராடி பெற்று தரும் நிலையிலேயே தொடர முடியாது; மக்கள் தேவைகளை நிறைவேற்றி தரும் நிலையை எட்ட வேண்டும். பா.ம.க.,வின் 38ம் ஆண்டு, புதிய தொடக்கமாக அமையும். இந்த ஆண்டில் நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் தரும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன.

டவுட் தனபாலு: உங்களது கருத்தை பார்த்தால், தே.ஜ., கூட்டணியில் நீடித்து நீங்க மத்திய அமைச்சராக போறீங்களா அல்லது தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் சேர்ந்து, உங்க மனைவி சவுமியாவை அமைச்சராக்க போறீங்களா என ஏகப்பட்ட, 'டவுட்'கள் கிளம்புதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us