தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூலை 16, 2026 12:35 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2026 12:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க., வில் இணைந்துள்ள அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர்: த.வெ.க.,வில் இருந்து, 'எங்கள் கட்சிக்கு வாங்க' என்று யாரும் என்னை கூப்பிடவில்லை. அ.தி.மு.க., தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் அக்கட்சி எம்.எல். ஏ.,க் கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலர் த.வெ.க., வில் இணைந்து வருகின்றனர். கரூர் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகி களிடம் கருத்துக் கேட்ட பின்பே த.வெ.க.,வில் இணைந்தேன்.



டவுட் தனபாலு: 'எல்லாரும் போறாங்க, நானும் போனேன்' என்று சொல்வது முன்னாள் அமைச்சரான உங்களுக்கு அழகா...? உங்களுக்கு பதவி ஆசை இல்லை என்றால், 'வரப்போற கரூர் தொகுதி இடைத்தேர்தல்ல நான் போட்டியிட மாட்டேன்... விஜய் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பேன்'னு சொல்ல முடியுமா என்ற, 'டவுட்' வருதே!

முன்னாள் அமைச்சரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன்: த.வெ.க., ஆட்சி ஆறு மாதங்களுக்கு மேல் நிலைக்காது. அடுத்த ஆறு மாதங்களில், தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவார். தி.மு.க.,வின் திருச்சி சிவா போன்ற எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்கள் ஆவர். அப்போது, சினிமாவில் என்னென்ன தவறுகளை முதல்வர் விஜய் செய்தார் என்பதெல்லாம் வெளியே வரும்.



டவுட் தனபாலு: இப்ப, மத்தியில் பா.ஜ., ஆட்சி நடக்குது... உங்க கருத்தை பார்த்தால், 'பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி அமைக்க போகுது... அவங்க உதவியுடன் தமிழக வெற்றி கழக அரசை வீட்டுக்கு அனுப்பிட்டு, ஸ்டாலினை முதல்வராக்கவும், அவரது கட்சி எம்.பி.,க்களை மத்திய அமைச்சர் களாக்கவும் திரைமறைவில் திட்டங்கள் நடக்குதோ' என்ற, 'டவுட்' தான் வருது!

ம.தி.மு.க., முதன்மைச் செயலர் துரை வைகோ: சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், ஒரு தொகு திக்கு குறைந்தது 20 கோடி ரூபாயும், சில முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில், 100 கோடி ரூபாயும் செலவிடப்பட்டது. ம.தி.மு.க., உட்பட தி.மு.க., கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு, 234 தொகுதிகளிலும் எவ்வளவு செல விடப்பட்டுள்ளது எனக் கணக் கிட்டுக் கொள்ளுங்கள். ஆனாலும், வெற்றி பெற முடியவில்லை.

டவுட் தனபாலு: உங்க கணக்குப்படியே, உங்க கட்சி போட்டியிட்ட நாலு தொகுதிகளுக்கும் தி.மு.க., 80 கோடி ரூபாய் செலவு பண்ணி, அதுல ரெண்டு பேரை ஜெயிக்கவும் வச்சிருக்கு... அதனால தான், ராஜினாமா பண்ணும்படி நீங்க கேட்டும், அந்த ரெண்டு எம்.எல்.ஏ.,க்களும் ஏத்துக்காம, தி.மு.க., பக்கமே போயிட்டாங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!

l

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us