தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூலை 27, 2026 12:41 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 27, 2026 12:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தொடர்ந்து மறுத்து, டெல்டா விவசாயிகளை பேரிடரில் தள்ளியிருக்கிறது. இது குறித்து, பிரதமரை சந்தித்து முதல்வர் விஜய் பேசியிருக்க வேண்டும்; ஆனால், பேசவில்லை. தலைமைச் செயலரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை. டெல்டாவின் உயிர் நாடி பிரச்னையில், இந்த அரசின் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது.

டவுட் தனபாலு: தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி நடந்து, என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும் அதுக்கு பலனிருக்காது... கர்நாடகாவில் மழை பெய்து, அணைகள் எல்லாம் நிரம்பி வழிந்தால், உபரி நீரை மட்டுமே தமிழகத்துக்கு திறப்பாங்க என்பது, 50 வருஷங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கும் உங்களுக்கு தெரியாதா என்ற, 'டவுட்' தான் வருது!

அ.தி.மு.க., உறுப்பினர் மற்றும் மாணவர் அணி மாநில செயலர் பதவியில் இருந்து விலகிய, சிங்கை ராமச்சந்திரன்: என் பெற்றோருக்கு, எம்.ஜி.ஆர்., தான் திருமணம் செய்து வைத்தார். எனக்கு ராமச்சந்திரன் என பெயர் வைத்த ஜெயலலிதா தான், அ.தி.மு.க., - ஐ.டி., அணி மாநில செயலர் பதவியும் கொடுத்தார். சில மாதங்களாக கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகள், எனக்கு மன வேதனையை அளித்தன. மனசாட்சியுடன் சமரசம் செய்து கொள்ள முடியாத நிலையில், கட்சியில் இருந்து விலகுகிறேன்.

டவுட் தனபாலு: யார் விலகினாலும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அசர மாட்டார்... உங்க பதவிக்கு புதுசா ஒருத்தரை நியமிச்சிட்டு, 'நம்ம கட்சியை யாரும் அசைக்க முடியாது'ன்னு, அறிக்கை விடுவார்... அது இருக்கட்டும்... நீங்களும், த.வெ.க., பக்கம் தாவப் போறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!

வி.சி.க., தலைவர் திருமாவளவன்: தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் வாயிலாக, உண்மையான தேசியம் என்ன என்பதை வெளிப்படுத்த உள்ளோம். மாநாட்டு செலவுக்காக, நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால், 1 கோடி ரூபாய் கூட நிதி சேரவில்லை. மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும். எனவே, அனைத்து மாவட்டச் செயலர்களும் நிதி அளித்து, மாநாட்டை சிறப்பிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கீங்க... உங்க கட்சி சார்பில், ஒருத்தர் அமைச்சராகவே இருக்காரு... ஆனாலும், '1 கோடி ரூபாயை திரட்ட முடியலை'ன்னு, நீங்க புலம்புவதை யாராவது நம்புவாங்களா என்பது, 'டவுட்' தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us