தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

4


PUBLISHED ON : ஆக 05, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2026 12:00 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:


எங்களை, 'திரள் நிதி திருடர்' என இதுவரை சொன்னவர்கள், திருட்டு நிதிக்காரர்கள்; இப்போது சொல்பவர்கள், கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்றவர்கள். நாங்கள் திரள் நிதி வாங்குவதை விமர்சிக்கின்றனர். மக்கள் இயக்கம் என்றால், மக்களிடம் இருந்து தான் நிதி பெற முடியும். 'சீமான் பென்ஸ் கார் வாங்கி விட்டார்' என்கின்றனர். அந்தக் கார், என் உறவினர் வாங்கித் தந்தது.

டவுட் தனபாலு:


இந்தக் காலத்துல, 'சிங்கிள் டீ' வாங்கிக் கொடுக்காத உறவினர்கள் தான், நாட்டுல நிறைய பேருக்கு இருக்காங்க... உங்களுக்கு மட்டும் பென்ஸ் கார் வாங்கித் தந்த உறவினர் யார் என்ற, 'டவுட்' வருதே... அது உண்மை தான் என்றால், அவரது பெயர், ஊர் விபரங்களை உங்களால வெளியிட முடியுமா என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது!

lll

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்:


தமிழகத்திற்கு வந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பற்றி எரியும் காவிரி பிரச்னை குறித்து, ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிச் சென்றதில் இருந்தே, காங்கிரசாருக்கு தமிழகத்தின் மீது உள்ள அக்கறை தெரிகிறது. கர்நாடகாவில் காங்., ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர்.

டவுட் தனபாலு:


கர்நாடகாவில் காங்., ஆட்சி நடக்கிறப்ப, நமக்கு சாதகமா ராகுல் எப்படி பேசுவார்...? தப்பித் தவறி அவர் குரல் கொடுத்தாலும், 'கன்னடர்களின் விரோதி'ன்னு, ராகுலுக்கு அவரது கட்சியினரே முத்திரை குத்திடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர்


'தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து ஓட்டளிக்காதவர்கள் எட்டப்பர்கள்' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட எட்டப்பர்களின் பட்டியலில், தற்போது அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளன. இனி புதிதாக யார் சேரப்போகின்றனர் என்பதை, தி.மு.க.,விடம் தான் கேட்க வேண்டும்.

டவுட் தனபாலு:


'எட்டப்பர்கள் பட்டியலில் அடுத்து சேர இருப்பது, தி.மு.க., தான்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது... அதேநேரம், ஒரு கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திச்சுட்டு, ஜெயிச்ச மறுநாளே ஆளும் கூட்டணிக்கு தாவும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு, என்ன பெயர் சூட்டலாம் என்ற, 'டவுட்'டுக்கு, தங்களிடம் விடை கிடைக்குமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us