தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஆக 08, 2026 12:41 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2026 12:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான எஸ்.பி.வேலுமணி: அ.தி.மு.க., எங்கள் கட்சி; நாங்கள் அதில் தான் தொடர்வோம். இதை எப்போதோ தெளிவுபடுத்தி விட்டோம். நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, த.வெ.க.,விற்கு ஏன் ஆதரவளித்தோம் என்பதை பலமுறை சொல்லிவிட்டோம். அதனால், நாங்கள் த.வெ.க.,விற்கு செல்கிறோமா என்ற கேள்வியே தேவையில்லை. பலர் தேவையில்லாமல், நாங்கள் த.வெ.க.,வில் சேரப் போவதாக கிளப்பி விடுகின்றனர். அதை வைத்து எங்களிடம் கேள்வி கேட்பதே தவறு.

டவுட் தனபாலு: வதந்தி பரப்புறவங்களை திட்டுறதை விட... அவங்களுக்கு இடம் கொடுக்காம சொந்த கட்சியோட கொள்கையில நீங்க ஏன் உறுதி இல்லாம இருக்குறீங்கன்னு, 'டவுட்' வருதே!

இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன் : த.வெ.க., அரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட்டில், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை பற்றிய திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை. குடும்ப தலைவியருக்கு மாதம் 2,500 ரூபாய்; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாய் நிவாரணம்; ஒப்பந்த பணியாளர்கள், தற்காலிக பணியாளர்களின் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றம். இந்த நிதிநிலை அறிக்கையின் பெரும் பகுதி, மக்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை.

டவுட் தனபாலு: ஆட்சிக்கு வந்தா அதைத் தருவோம், இதைத் தருவோம்னு சொல்றதை விட, பட்ஜெட்ல எவ்வளவு நிதியிருக்கோ அதைத்தான் தர முடியும்னு, உண்மையைப் பேசி அரசியல் பண்ற பக்குவம் எல்லா கட்சிகளுக்கும் வரணும் என்பதில், 'டவுட்'டே இல்ல!

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: தமிழக அரசின் நிதி ஆதாரத்தை பெருக்க, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நல்ல திட்டங்களை புதிய அரசு தொடர்வது வழக்கமான ஒன்றுதான். தமிழக நிதி நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். மின்சாரம், போக்குவரத்து கழகம், ஆவின் என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மூடும் நிலையில் தான் கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றிருக்கின்றனர். முதல்வர் விஜய், இதை சீரமைக்கும் வேலைகளை செய்து வருகிறார்.

டவுட் தனபாலு: அடுத்த தேர்தலுக்கு முன்னாடி, 'இது நாங்க செஞ்சது'ன்னு, பெருமையா சொல்ல எவ்வளவு சாதனை சேர்க்கப் போறீங்க என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us