தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஆக 09, 2026 12:34 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில், தேவையான மின் கம்பங்கள், 'டிரான்ஸ்பார்மர்'கள், மின் கம்பி உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை, வட்டார அளவில் இருப்பு வைக்க வேண்டும். தேவைக்கேற்ப சாதனங்களை எடுத்து செல்லும் வகையில் சிறப்பு குழுக்கள், அதற்குரிய வாகன வசதிகள், களப்பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும்.

டவுட் தனபாலு: வடகிழக்கு பருவமழை, அக்டோபர் கடைசி வாரத்தில் தான் துவங்கும்... அதுக்கு, இன்னும் ரெண்டு மாசம் இருக்கு... இப்பவே, இவ்வளவு முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளை செஞ்சுட்டா, வரக்கூடிய மழையும் வராம போயிடும்... இப்ப நிலவும் மின்வெட்டு பிரச்னையை தீர்த்துட்டு, பருவமழை பக்கம் போனா, 'டவுட்' இல்லாம உங்களை பாராட்டலாம்!

பா.ஜ., லோக்சபா எம்.பி., நிஷிகாந்த் துபே: பிரதமர் மோடியின் உரைகள் அடங்கிய வீடியோக்கள் நீக்கப்பட்டது தொடர்பாக, 'பேஸ்புக்' நிறுவனம் மன்னிப்பு கோரியது, நம் நாட்டு சட்டங்கள், அரசியலமைப்பு மற்றும் பார்லிமென்டுக்கு கிடைத்த வெற்றி. இந்தியாவில் தொழில் செய்ய விரும்பும் எவரும், நம் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

டவுட் தனபாலு: 'பேஸ்புக்' நிறுவனம் அமெரிக்காவில் இருந்தாலும், அதை பயன்படுத்துறவங்க எண்ணிக்கையில், உலக அளவில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கு... அந்த சமூக வலைதளத்துக்கு மத்திய அரசு தடை விதிச்சுட்டா, அவங்க பல ஆயிரம் கோடி ரூபாயை இழக்க வேண்டியிருக்கும்... அதனால தான், விழுந்தடிச்சிட்டு மன்னிப்பு கேட்டிருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான வேலுமணி: ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, கல்லுாரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுவதுடன், வீடு கட்டும் திட்டங்களுக்கான நிதி, த.வெ.க., அரசின் முதல் பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்து, தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட, 'தாலிக்கு தங்கம்' திட்டத்தை, மீண்டும் கொண்டு வந்துள்ளதும் வரவேற்கத்தக்கது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, த.வெ.க., அரசுக்கு போதிய அவகாசம் கொடுக்க வேண்டும்.

டவுட் தனபாலு: 'இந்த பட்ஜெட்டில் ஒண்ணுமே இல்லை'ன்னு, உங்க தலைவர் பழனிசாமி கரிச்சு கொட்டிட்டு இருக்காரு... நீங்களோ பாராட்டு பத்திரம் வாசிக்கிறீங்களே... அதிகாரப்பூர்வமா நீங்க அ.தி.மு.க.,வில் இருந்தாலும், உங்க மனசு முழுக்க த.வெ.க.,விடம் சரண்டராகிடுச்சு என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us