தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : ஆக 13, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2026 01:18 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரள மாநிலம், வயநாடு காங்., - எம்.பி., பிரியங்கா: டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான தடியடி குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லிமென்டில் விளக்கம் அளிக்கும் வரை, பார்லிமென்ட் முடக்கம் தொடரும். அதை விடுத்து, மற்ற விவகாரங்கள் பற்றி அமித் ஷா பேசினால், நிச்சயமாக அமளியில் ஈடுபடுவோம்.

டவுட் தனபாலு: அது சரி... ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி, தடியடி வாங்கிய மாணவர்கள் கூட, துடைச்சு விட்டுட்டு அவங்க வேலைகளை பார்க்க போயிட்டாங்க... 'அவங்களுக்காக குரல் கொ டுக்கிறோம்' என்ற போர்வை யில், நீங்க தான் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!

பத்திரிகை செய்தி: மாவட்ட வாரியாக இருந்த ரசிகர் மன்றங்களை, தொகுதி வாரியாக விரிவு படுத்தி, உறுப்பினர் சேர்க்கை நடத்தி, தன் பலத்தை எடை போட, நடிகர் தனுஷ் திட்டமிட்டு உ ள்ளார். அவரது செயல்பாடு, வரும் காலத்தில் த.வெ.க.,வுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு இருக்கிறது. எனவே, தனுஷின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உளவுத்துறையில் சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சியில், கட்சி துவங்க திட்டமிட்ட விஜயையும் இப்படித்தான் கண்காணிச்சாங்க... விஜயின் பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட தடைகளை போட் டாங்க... இப்ப, ஆட்சிக்கு வந்திருக்கும் விஜயும், அதே பாணியில் செயல்படுறாரே... அதிகாரத்தில் அமர்ந்துட்டாலே, 'எதிரிகளே இருக்கக்கூடாது' என்ற எண்ணம் எல்லாருக்கும் வந்துடுமோ என்ற, 'டவுட்' தான் வருது!

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி: அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் பரிந்துரை செய்தவர்களையே, சட்ட சபைத் தேர்தலில் வேட்பாளர்களாக பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தார். தகுதியான வேட்பாளர்களாக இருந்தால், அவர்கள் ஏன் தோல்வியடைந்தனர்? அனைத்து மாவட்டங் களிலும் ஒற்றுமையாக வேலை செய்திருந்தால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கும்.

டவுட் தனபாலு: என்ன தான் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியிருந்தாலும், விஜய் அலைக்கு முன்னாடி எல்லாரும் காணாம போயிருப்பாங்க... முதல்வரா இருந்த ஸ்டாலினே, சென்னை கொளத்துார்ல தோற்றுப் போகலையா...? அதனால, நடந்து முடிஞ்சதை பேசுறதை விட்டுட்டு, 'அடுத்து என்ன செய்யலாம்'னு, யோசிச்சு முடிவு எடுத்தால் மட்டுமே, அ.தி.மு.க.,வை காப்பாற்ற முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us