தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஆக 17, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2026 01:30 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கம்யூ., கட்சியின் திருப்பூர் எம்.பி., சுப்பராயன்: காவிரி விவகாரத்தில் தமிழக நலன் காக்கப்பட வேண்டும். மேகதாதுவில் அணை கட்டக் கூடாது. இப்பிரச்னையில் தமிழக அரசு, அனைத்து கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது.



டவுட் தனபாலு: காவிரி பிரச்னை பற்றி இப்படி நீட்டி முழக்குறீங்களே... 'முல்லை பெரியாறு அணைக்கு பதிலா, புது அணை கட்டணும்'னு, கேரளாவுல இருக்கும் உங்க கட்சியினர் குரல் கொடுத்துட்டு இருக்காங்களே... அவங்களை கண்டிக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கா என்ற, 'டவுட்' வருதே!

துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி: டில்லியில் லோக் சபா சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில், தி.மு.க., சார்பில் நாங்கள் பங்கேற்றதை சர்ச்சையாக்குவதற்கு என்ன இருக்கிறது? பார்லிமென்டில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளை மாற்றித் தரும்படி சபாநாயகரிடம் ஏற்கனவே கேட்டிருந்தோம். அது தொடர்பாக, அவரை நேரில் சந்தித்து பேச அங்கு சென்றோம். 'இண்டி' கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் பங்கேற்றோம். தற்போது, 'இண்டி' கூட்டணியில், தி.மு.க., இல்லை.

டவுட் தனபாலு: தி.மு.க., சார்பில், ஏற்கனவே பலர் மத்திய அமைச்சர்களா இருந்திருக்காங்க... கிட்டத்தட்ட, 19 வருஷங்களா ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,யாக இருக்கும் உங்களுக்கு ஏனோ அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை... பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., சேர்ந்தால், மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைக்கும்னு தேநீர் விருந்துக்கு போனீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: தி.மு.க., - பா.ஜ., இடையே மறைமுக கூட்டணி இருந்தது; இப்போது, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டனர். 'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி கூறுகிறார். குடும்ப சொத்துக்களை காப்பாற்ற, பா.ஜ.,வுடன் நேரடியாக கூட்டணி வைக்க தி.மு.க.,வினர் தயாராகி விட்டனர்.

டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 22 வருஷங்களா காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க.,வினர் கட்டி காப்பாத்திட்டு வந்தாங்க... ஒரே தேர்தலில் ஜெயித்த நீங்க, காங்.,கை உங்க பக்கம் இழுத்துட்டீங்க... தேசிய அரசியலில் வலுவாக இருக்கும் பா.ஜ.,வையும் பகைத்துக் கொண்டால், முதலுக்கே மோசம் வந்துடும்னு, தி.மு.க.,வினர் அந்தப் பக்கம் சாயுறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us