தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

5


PUBLISHED ON : ஆக 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2026 12:00 AM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன்: பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு 48 ரூபாயாக உயர்த்துமாறு, பால் உற்பத்தியாளர்கள் போராடி வருகின்றனர். எனவே, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, லிட்டருக்கு 48 ரூபாய் என கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும். அதேநேரம், நுகர்வோருக்கு பால் விலையை உயர்த்தாமல், அதற்கேற்ற மானியத்தை ஆவின் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

டவுட் தனபாலு: விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்கிட்டு, நுகர்வோருக்கும் விலையை ஏற்றக்கூடாதுன்னு, 'பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்' கதையா பேசுறீங்களே... ஏற்கனவே, ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் ஆவினை இழுத்து மூட யோசனை சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

------

பத்திரிகை செய்தி: காங்கிரஸ் ஆட்சி செய்யும் கேரளாவில், த.வெ.க.,வை வலுப்படுத்தும் பணியின் முதற்கட்டமாக, அம்மாநில த.வெ.க., தலைவராக நடிகர் தேவன் நியமிக்கப்பட உள்ளார். தமிழகம், புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள த.வெ.க., கேரளாவிலும் கட்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதால், அங்கு ஆட்சியில் இருக்கும் காங்., அதிர்ச்சியில் உள்ளது.

டவுட் தனபாலு: அது சரி... தமிழகத்துல 50 வருஷங்களுக்கும் மேலா, தி.மு.க., - அ.தி.மு.க.,ன்னு இருந்த போட்டியை, த.வெ.க., வந்து, ரெண்டு கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பிடுச்சு... அதே மாதிரி, கேரளாவிலும் காங்., - கம்யூ.,க்கள் என்ற இருமுனை போட்டியை, த.வெ.க., வந்து காலி பண்ணிடும்னு பயப்படுறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

------

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக, மே 8 இரவு முதல் குதிரை பேரம் துவங்கியது. அன்றைய தினம் இரவே, கவர்னரிடம் அதுபற்றி கூறியிருந்தேன். இப்போது, 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், மீண்டும் குதிரை பேரம் தொடங்கியுள்ளது. 'பத்து எம்.எல்.ஏ.,க்கள் எங்களை தேடி வர போகின்றனர்' என, அமைச்சர் ஒருவர் சொல்கிறார். இது குறித்து கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன்; உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் தெரிவித்தார்.

டவுட் தனபாலு: கேரளாவில் முழு நேர கவர்னரா இருக்கிற அர்லேக்கர், தமிழகத்துக்கு கூடுதல் பொறுப்பா தான் இருக்கார்... எப்பவாவது தமிழகம் பக்கம் எட்டி பார்க்கிறவர், என்ன நடவடிக்கை எடுத்துடுவாரு...? அதனால, முழு நேர கவர்னர் நியமிக்கும் வரை நீங்க பொறுமையா தான் இருக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us