தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : செப் 03, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2026 01:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஹார் மாநில கட்சியான லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான்: எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரின் நலன்களை நாம் பாதுகாக்க வேண்டும்; அதேசமயம், உயர் ஜாதியினரின் அச்சங்களை யும் போக்க வேண்டும். ஒரு ஜாதியின் நலனை பாதுகாப்பது, மற்றொரு ஜாதியை சுரண்டுவதாக இருக்கக்கூடாது. உயர் ஜாதியினருக்கு நீதி தேவைப்பட்டால் உதவுவது என் கடமை.

டவுட் தனபாலு: சபாஷ்... நீங்க தலித் தலைவராக இருந்தாலும், மற்ற சமுதாயத்தினருக்காகவும் பாடுபடும் உங்க நேர்மையை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்... ஆனா, தமிழகத்துல சில கட்சி தலைவர்கள், தலித் சமுதாயத்தை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன் படுத்திட்டு இருக்காங்க... அவங்க எல்லாம், உங்களிடம் பாடம் படிக்கணும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

தி.மு.க.,வில் இருந்து விலகிய, முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம்: சட்டசபை தேர்தலின் போது எனக்கும், என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இனியும், தி.மு.க.,வில் பயணிக்க என் மனம் இடம் தராத தால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகு கிறேன். இது குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., வில் நீண்டகாலம் பயணித்து, அமைச்சராகவும் இருந்த உங்களால, தி.மு.க.,வின் வாரிசு அரசியல், குறுநில மன்னர்கள் கட்டமைப்பை ஜீரணிக்க முடியலை என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அடுத்து, தாய் கட்சிக்கு போக போறீங்களா அல்லது த.வெ.க., பக்கம் தாவ போறீங்களா என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே எழுது!

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: 'இண்டி' கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியே தலைமை வகிக்கிறது. எனவே, 2029 லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் வேட்பாளராக ராகுல் தான் நிறுத்தப்படுவார். முதல்வர் விஜய்க்கு கற்பனையில் கூட அப்படியான எண்ணம் இருக்காது; இல்லை என்பது தான் என் கருத்து.

டவுட் தனபாலு: அடுத்தவங்க மனசை படிக்க நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்களே... தேர்தலுக்கு முன்னாடி, தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவு இல்லை; த.வெ.க.,வுக்கு தான் ஆதரவு தருவாங்கன்னு மக்கள் மனசை நீங்க படிச்சு, அப்பவே த.வெ.க., கூட்டணியில் சேர்ந்திருந்தால், இன்னைக்கு உங்க கட்சியினரும் அமைச்சர்களா வலம் வந்திருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us