தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

4


PUBLISHED ON : செப் 21, 2026 01:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2026 01:00 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்: வரும் அக்., 11ம் தேதி, மதுரை தமிழ் சங்கத்தின் சார்பில், முதல்வர் விஜய் வாழ்க்கை வரலாற்று நுாலை வெளியிடுகிறேன். த.வெ.க., சிறப்பாக ஆட்சி செய்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க., தான் வெற்றி பெறும். தமிழகத்தில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு, த.வெ.க., ஆட்சி தான் நடக்கும்.

டவுட் தனபாலு: அடடா... த.வெ.க.,வினர் கூட, 'அடுத்த 20 வருஷங்களுக்கு த.வெ.க., ஆட்சி'ன்னு அடக்கி தான் வாசிக்கிறாங்க... நீங்களோ, '100 வருஷங்களுக்கு த.வெ.க., ஆட்சி'ன்னு அடிச்சு விடுறீங்களே... விஜய் வாழ்க்கை வரலாற்று நுாலை வெளியிட, உங்களை சரியாத் தான் தேர்வு செஞ்சிருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ்: உலகின் பல்வேறு நாடுகளிலும், அந்நாட்டின் பிரதமர்கள் பல முறை மாறி உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில், இங்கிலாந்தில் எட்டு முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். ஆனால், இந்தியாவில் பிரதமராக மோடி நிலையாக உள்ளார்.

டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... இந்த 12 வருஷங்கள்ல அமெரிக்காவில் கூட ஒபாமா, ஜோ பைடன், டிரம்ப்னு மூணு அதிபர்கள் மாறிட்டாங்களே... அது இருக்கட்டும்... 'மோடி அசைக்க முடியாத தலைவரா இருக்கார்'னு நீங்க பெருமைப்படுறீங்களா அல்லது, 'கட்சியில் மத்தவங்களுக்கு வழி விடாம, அவரே பதவியை ஆக்கிரமிச்சிட்டு இருக்கார்'னு ஆதங்கப்படுறீங்களான்னு ஏகப்பட்ட, 'டவுட்'கள் வருதே!

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தொழில் முதலீடுகளை ஈர்க்க, லண்டன் சென்று வந்த முதல்வர் விஜய், அந்த துறையின் அமைச்சர் மற்றும் செயலரை அழைத்து செல்லாமல், சம்பந்தமில்லாத அதிகாரிகளை அழைத்து சென்றுள்ளார். 'தொழில் முதலீட்டை ஈர்க்கச் சென்றாரா, இன்பச் சுற்றுலா சென்றாரா' என மக்கள் கேட்கின்றனர்.

டவுட் தனபாலு: முதல்வர் விஜய் ஏற்கனவே நடிகரா இருந்தப்ப, படப்பிடிப்புகளுக்காக பல வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தவர் தான்... அதனால, அரசு பணத்தில் தான் சுற்றுலா போகணும்னு அவருக்கு அவசியம் இல்லை... ஆனா, நீங்க முதல்வரா இருந்தப்ப, 'கோட், சூட்'டெல்லாம் மாட்டிக்கிட்டு, பல வெளிநாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கப் போனீங்களே... அதுல, இப்ப எத்தனை செயல்பாட்டில் இருக்கு என்ற புள்ளி விபரங்கள் தங்களிடம் இருக்குமா என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us