தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : செப் 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்:


இடைத்தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் விஜய் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆபாசமாக பேசி இருக்கிறார். விரக்தியின் உச்சத்தில் உதயநிதி இருப்பதால், பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார். அவரது பேச்சை, அவரது குடும்பத்தில் உள்ளவர்களிடம் போட்டு காட்ட முடியுமா? உதயநிதி கடைசி வரை கத்துக்குட்டி தான். அவரால், தி.மு.க.,வுக்கு எதிர்காலம் உண்டா என்று தி.மு.க.,வினர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

டவுட் தனபாலு:


தி.மு.க.,வின் எதிர்காலம் உதயநிதி தான் என்பதை அந்த கட்சியினர் எப்பவோ ஏத்துக்கிட்டாங்களே... தேசிய அளவில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் எந்த அளவுக்கு சொதப்புகிறாரோ, அதற்கு சற்றும் சளைக்காம தமிழக எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதியும் செயல்படுவது, 'டவுட்' இல்லாம தெரியுது!

------

காங்கிரசைச் சேர்ந்த, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்:


நம் நாட்டில் தேர்தல்கள், 100 சதவீதம் முறைகேடாக நடைபெறுகின்றன என்பதை உறுதியாக நம்புகிறேன். கடல் கொந்தளிப்பாக இருக்கும்போது அதில் நீந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். கொந்தளிப்பும் ஒரு வகையான அமைதி என்பதை அது நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

டவுட் தனபாலு:


'சுனாமியிலயே ஸ்விம்மிங்கை போடுவேன்'னு நல்லா தான் பேசுறீங்க... நம்ம நாட்டில் தேர்தல்கள், 100 சதவீதம் முறைகேடா நடந்துச்சு என்றால், உங்க கட்சியின் ஆட்சி நடக்கும் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்ற, 'டவுட்' வருதே!

-----

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி:


'ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வும் படிப்படியாக த.வெ.க.,விற்கு வந்து விடும்' என்கின்றனர்; அது கனவில் கூட நடக்காது. அ.தி.மு.க., தான் த.வெ.க.,வை வீழ்த்தும். த.வெ.க., ஆட்சியை காப்பாற்ற, எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் வெட்கக்கேடான செயலை முதல்வர் விஜய் செய்கிறார். த.வெ.க., தான் தீய சக்தி.

டவுட் தனபாலு:


முதல்வர் விஜய், தி.மு.க.,வை தானே தீயசக்தின்னு விமர்சிக்கிறார்... உங்களை அவர் கண்டுக்கவே இல்லையே... ஆனாலும், நீங்க முந்திக்கிட்டு பதிலடி தர்றீங்களே... 'தி.மு.க., - அ.தி.மு.க., இடையே ரகசிய உறவு இருக்கு'ன்னு, த.வெ.க.,வினர் சொல்றது உண்மை தானோ என்ற, 'டவுட்' தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us