PUBLISHED ON : அக் 01, 2026 12:00 AM

பா.ம.க.,வைச் சேர்ந்த, தர்மபுரி எம்.எல்.ஏ., சவுமியா:
தமிழகத்தில், மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மக்கள் மத்தியில் விழிப் புணர்வு ஏற்படுத்த பிரசார இயக்கம் நடத்தப்படும். அதன் முதல் கட்டமாக, தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி, அக்., 2ம் தேதியான நாளை, சென்னையில் மகளிர் விழிப் புணர்வு பேரணி தொடங்கப் படும்.
டவுட் தனபாலு:
காந்தி ஜெயந்தியான நாளை, ஏற்கனவே மதுபான கடைகளுக்கு விடு முறை விட்டுருவாங்க... அன்னைக்கு ஆர்ப்பாட்டம் நடத் தினா எடுபடுமா...? பேசாம உங்க மாமனார் ராமதாஸ் பாணியில், மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தி பார்த்தால் என்ன என்ற, 'டவுட்' வருதே!
-----------
'வீ த லீடர்ஸ்' அமைப்பின் பொதுச்செயலர் சுவாமிநாதன்:
'ஜெம்' வீரமணி வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் கோட நாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும் முழு உண்மை வெளிவரவில்லை. இதில், அதிகாரம், பணம், ஆவணங்கள், அரசியல் தொடர்புகள் இருந்தனவா என்பதை கண்டுபிடிக்க வேண் டும். அனைத்து கோணங்களிலும் விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்.
டவுட் தனபாலு:
நீங்க, ஏற்கனவே அ.தி.மு.க.,வில் இருந்து, அதன் பொதுச்செயலர் பழனிசாமி போக்கு பிடிக்காம, அங்கிருந்து விலகி இங்க வந்திருக்கீங்க... கோடநாடு வழக்கில், பழனிசாமி மீது தான் அரசல் புரசலா குற்றச்சாட்டுகள் இருக்கு... அதனால, கோடநாடு வழக்கிலும் சிறப்பு புலனாய்வு குழு கேட்டு பழனிசாமியை, 'கோர்த்து' விட பார்க்கிறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
-----------
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி:
தி.மு.க., ஆட்சியின் போது தமிழகம் முதலிடத்தில் இருந்தது. ஓட்டு போட்ட மக்களின் முகத்தில் கரியை பூசும் விதமாகத் தான், இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. சினிமா போல, 'ஒரே நாளில் மாற்றி விடுகிறேன்' என சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், எதை மாற்றினார்?
டவுட் தனபாலு:
ஒண்ணா, ரெண்டா...? குடும்ப ஆட்சிக்கு, வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளி வச்சிருக்காரு... 'டெண்டர்' ஒதுக்கீட்டில், கட்சி நிதி வசூல் கலாசாரத்தை ஒழிச்சிருக்காரு... அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிச்சிருக்காரு... அரசியல் தலையீடு இல்லாம அதிகாரிகள் சுதந்திரமா இயங்க அனுமதிச்சிருக்காரு... இதை எல்லாம் உங்க ஆட்சியில் செஞ்சிருந்தா, இன்னைக்கு எதிர்க்கட்சி வரிசைக்கு போயிருக்க மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
