sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : டிச 04, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 04, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவக்கி, அரசியலில் கால் பதித்துள்ளார்;அவரை வரவேற்கிறோம். அவரதுமாநாட்டில் நிறைய விஷயங்கள்பேசியிருக்கிறார். ஆனால், மாநாட்டுக்கு பின் அமைதியாகஇருக்கிறார். அவர், முழுநேர அரசியலுக்கு வரும்போது தான்,விஜயின் அரசியல் குறித்து விமர்சிக்க முடியும்.

டவுட் தனபாலு: அது சரி... மாநாட்டை நடத்தி முடிச்ச கையுடன்,வீட்டிலேயே விஜய் முடங்கிட்டாரு...கட்சியினரை கூட, அங்கு தான் வரவழைச்சு சந்திக்கிறாரு... இதைதான், 'பார்ட் டைம் அரசியல்வாதி'ன்னு நாசுக்கா சொல்லி, அவரை பகடி பண்ணியிருக்கீங்கஎன்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!



அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: பிரதான எதிர்க்கட்சி,மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளை உரிய நேரத்தில்அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்; அது எங்கள் கடமை. அந்த பிரச்னைகளை தீர்த்து வைப்பது முதல்வரது கடமை. ஆனால், தற்போதைய முதல்வர் நாங்கள் சொல்லும் பிரச்னைகளை தீர்ப்பதில்லை.

டவுட் தனபாலு: எதிர்க்கட்சி தலைவராக, உங்க கடமையை நீங்க செய்றீங்க... ஆனா, முதல்வரோ, 'எதிர்க்கட்சி தலைவருக்கு பதில் தராமல் இருப்பதுதான் என் கடமை' என்ற கொள்கையுடன் செயல்படுகிறாரோஎன்ற, 'டவுட்'தான் வருது!



அ.தி.மு.க., அமைப்பு செயலர்செங்கோட்டையன்: நடிகர் விஜய்,புதிய கட்சி துவக்கி இருக்கிறார்.அதை வைத்து, தேர்தலில் பெரியஅளவில் வெற்றி பெறலாம் என்றும் நினைக்கிறார். ஆனால்,எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர்.,ஆகிவிட முடியாது; வெற்றியும்எளிதில் கைகூடி விடாது. தி.மு.க.,வில் பல காலம் பணியாற்றி, பல நிலைகளில் பதவிகளில் இருந்து மக்கள் தொண்டாற்றிய பின்பே, எம்.ஜி.ஆர்.,கட்சி துவக்கினார்; அதன்பின்பே,தேர்தலில் போட்டியிட்டார். மக்களும், அவருக்கு மாபெரும் வெற்றியை தீர்ப்பாக வழங்கினர்.

டவுட் தனபாலு: சரியா சொன்னீங்க... இரண்டு முறை எம்.எல்.ஏ., சிறுசேமிப்பு துறை தலைவர் பதவின்னு, அரசியலில்படிப்படியாகவே எம்.ஜி.ஆர்., வளர்ந்தார்... 'இன்று கட்சி துவக்கி,நாளை முதல்வராகிடணும்'னு அவர் நினைக்கலை... இப்ப இருக்கிற நடிகர்களுக்கு இந்த உண்மை தெரியலையோ என்ற,'டவுட்'தான் வருது!








      Dinamalar
      Follow us