PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தி.மு.க.,வின் தேர்தல்வெற்றிக்கு மறைமுகமாக துணைபோகும் கட்சியாகவும், தான் செய்த ஊழலில் இருந்தும், வழக்கு, கைதுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், தி.மு.க.,வுடன் பழனிசாமி கள்ளக்கூட்டணி வைத்துள்ளார்.
டவுட் தனபாலு: 'பழனிசாமி,என்னையும், சசிகலா, பன்னீர்செல்வத்தையும் அ.தி.மு.க.,வில்மீண்டும் சேர்த்துக் கொண்டால்மட்டுமே, அது நல்ல கூட்டணியாஉருமாறும்'னு சொல்ல வர்றாரோஎன்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: சட்டசபை தேர்தலை சந்திக்க, ஒரு தொகுதிக்கு 1 கோடி ரூபாய் வீதம்,234 கோடி ரூபாய்நன்கொடை வசூலிக்க, தி.மு.க.,திட்டமிட்டுள்ளது. 'வசூலாகும் தொகையை அன்றைய தினமே வங்கியில் டிபாசிட் செய்ய வேண்டும். 1 கோடி ரூபாய் வசூலானதும் நிறுத்திக்கொள்ளவேண்டும்' எனவும், மாவட்டச் செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: ஆட்சியில இருக்கிற கட்சிக்கு, தொகுதிக்கு 1 கோடி ரூபாய் வசூலிக்கிறது பெரிய விஷயமா என்ன...? தலைமையின் இலக்கை, ஒரே நாள்ல உடன்பிறப்புகள் எட்டிடுவாங்க என்பதில், 'டவுட்'டேஇல்லை!
பத்திரிகை செய்தி:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 16 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலம் கடந்த செப்., 2ல் தான் திறக்கப்பட்டது. தற்போது, வெள்ளத்தில் இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. அரசு தரப்போ, 'பெஞ்சல் புயல் காரணமாக, வரலாறு காணாத வகையில், 45 செ.மீ.,க்கு மேல் கனமழை பெய்தது. சாத்தனுார் அணையில் இருந்து வழக்கமாகவெளியேற்றப்படும் உபரி நீரின்அளவை விட, நான்கு மடங்கு அதிகமாக, வினாடிக்கு, 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டது. இதனால், பாலம் சேதம் அடைந்தது' என, விளக்கம் அளித்துள்ளது.
டவுட் தனபாலு: தமிழகத்துலஒவ்வொரு வருஷ மழைசீசனிலும், 40 - 50 செ.மீ., மழை பெய்வது வழக்கமாகி விட்டது... அதனால, நாலு மடங்கு அதிகம் அல்ல, 40 மடங்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டாலும், தாங்கும் திறனில் அல்லவா பாலம்கட்டியிருக்கணும்... 16 கோடி ரூபாயில், பாதியையாவது பாலம்கட்ட செலவழிச்சிருப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!