PUBLISHED ON : டிச 11, 2024 12:00 AM

வி.சி., கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா:
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக்கூடாது என்று நினைக்கும்மனநிலை தான், மன்னர் பரம்பரைக்கான மனநிலை என்பதை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தை தட்டிப் பறிக்கும் மனநிலையை, எதிர்கால தேர்தல் பிரசாரத்தின் வாயிலாக உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதை பெறும்போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக பணிஆற்றுவேன்.
டவுட் தனபாலு:
ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரத்துக்காக போராடிய, அந்த சமூகம் அல்லாதஉங்களை, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் தலைவர் மூலமாகவே, சாமர்த்தியமா கழற்றி விட்டுட்டாங்களே... உங்க சபதத்தைபார்த்தால், தி.மு.க., ஆட்சிக்கு எதிரான பிரசாரத்தை இப்பவே துவங்கிடுவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
------
தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி:
தி.மு.க.,வுக்கு விஜய் எச்சரிக்கை விடுப்பதாக சொல்வது, அவர் தி.மு.க.,வை பார்த்து பயப்படுகிறார்என்று அர்த்தமாகிறது. அவரது விமர்சனங்கள் தி.மு.க.,வை நோக்கியே இருப்பதால், தி.மு.க.,வை பார்த்து அவர்பயப்படுவதாகவே அர்த்தம்.
டவுட் தனபாலு:
தி.மு.க.,வை பார்த்து விஜய் பயப்படுற மாதிரி தெரியலையே... அவரது பேச்சுக்குஅமைச்சர்கள் பலரும் வரிஞ்சு கட்டிட்டு மாறி மாறி பதிலடி தருவதை பார்த்தாலே, நீங்க தான்அந்த கட்சியை பார்த்து பயப்படுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
----------
தமிழக மின் துறை அமைச்சர்செந்தில் பாலாஜி:
மத்திய அரசு தேர்வு செய்த, 11 பேர் வெளிநாட்டுக்கு சென்று படித்துள்ளனர்.அதில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் உள்ளனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி மட்டும் திரும்ப திரும்ப செய்தி வெளியிட்டு கொண்டுஇருக்கின்றனர். அவர் லண்டன்சென்று படித்ததாலேயே சமூகமாற்றம் ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விழைகின்றனர்.
டவுட் தனபாலு:
தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலையை தான், நீங்க சொல்றீங்க என்பது,'டவுட்'டே இல்லாம தெரியுது... அவர் இல்லாம, தமிழக அரசியல் களம் உப்பு சப்பில்லாம இருந்ததும், இப்ப அவர் வந்ததும்,உங்களை மாதிரி அமைச்சர் பெருமக்களின் துாக்கம் கெட்டு போயிருப்பதும், 'டவுட்'டே இல்லாமதெரியுது!

