sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : டிச 15, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 15, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன்: பழனிசாமி ஆட்சியில்,2,000 அம்மா மினி கிளினிக்குகளை உருவாக்கினார். அதை ஸ்டாலின் அரசு நிறுத்தி விட்டு, 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை உருவாக்கியது. இந்ததிட்டத்தில் பணிச்சுமை காரணமாக, சுகாதார தன்னார்வலர்கள்ஓட்டம் பிடித்து விட்டனர். ஆனால்,இது வெற்றிகரமான திட்டம் என்றமாயையை உருவாக்கும் வகையில்,ஒரு நோயாளியின் தரவுகளை, இரண்டு மற்றும் மூன்று முறை பதிவு செய்து கணக்கு காட்டி வருகின்றனர்.

டவுட் தனபாலு: அது சரி... அரசுமருத்துவமனையை தேடி போற மக்களுக்கே முறையா சிகிச்சை கொடுக்க டாக்டர்களும், நர்ஸ்களும்போதிய அளவுல இல்லை... இதுல,மக்களை தேடி மருத்துவம் எல்லாம், நடக்கிற காரியமில்லைன்னு முடிவு பண்ணி, 'ரிப்பீட்டு' கணக்கு காட்டுறாங்களோஎன்ற, 'டவுட்'தான் வருது!



அ.ம.மு.க., பொதுச் செயலர்தினகரன்: மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம், குலக்கல்வி திட்டம் என்றால், மாநில அரசின் 'கலைஞர் கைவினை திட்டம்' குலத்தை வலுப்படுத்தும்திட்டமா. தந்தை பெயரை சூட்டுவதற்காகவே, திட்டங்களை உருவாக்கும் முதல்வர் ஸ்டாலினின்செயல்பாடு கண்டனத்துக்கு உரியது.

டவுட் தனபாலு: 'தேசிய கல்விகொள்கையை ஏத்துக்க மாட்டோம்'னுசொல்லிட்டு, அதுல இருக்கிறபல நல்ல விஷயங்களை நாசுக்கா உருவி இங்க செயல்படுத்துறாங்க... 'புதிய மொந்தையில் பழைய கள்' பாணியில், விஸ்வகர்மா திட்டத்தையும் புது பெயர்ல புகுத்துவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!



முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ்: பழனிசாமி மீதான அனைத்து வழக்குகளும் தொட்டிலில் துாங்க வைக்கப்பட்டுள்ளன. தி.மு.க., 16 கோடி ரூபாயில் கட்டிய பாலம் வேண்டுமானால் மூன்று மாதங்களில் இடிந்திருக்கலாம். ஆனால், பழனிசாமியுடன் தி.மு.க., கட்டியிருக்கும் ரகசிய உறவு பாலம், மூன்றரை ஆண்டுகளைகடந்து, கெட்டியாக இருக்கிறது.

டவுட் தனபாலு: இவரது தலைவர்பன்னீர்செல்வம் மீது கூட லஞ்ச ஒழிப்பு துறை வழக்குகள் சில நிலுவையில இருக்குதே... இவருக்கே தெரியாம, ஆளுங்கட்சியுடன் பன்னீர்செல்வம் ரகசிய, 'டீல்' போட்டு, அந்த வழக்குகளையும் துாங்க வச்சிருப்பாரோ என்ற, 'டவுட்' வருதே!








      Dinamalar
      Follow us