PUBLISHED ON : நவ 28, 2025 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிழலும்... அதன் அளவும்
சில நேரத்தில் ஒரு பொருளை விட அதன் நிழல் பெரிதாகஇருக்கும். சூரிய ஒளி எந்தக் கோணத்தில் விழுகிறது என்பதைப் பொறுத்து நிழலின் அளவு அமைகிறது. ஒளியற்ற இடம்தான் நிழல். எனவே ஒளியில்லாத
இருளில் நிழல் ஏற்படுவதில்லை. இருட்டு அறையில் டார்ச் விளக்கை இயக்கினால் எதிர் சுவர் முழுதும் ஒளி படரும். விளக்கை கையால் மூடினால் சுவரில் ஒளி படராது.கையின் நிழல்தான் படரும். கையை, தொலைவாக சுவருக்கு அருகே வைத்தால், சுவரில் கையளவுதான்
நிழல் ஏற்படும். ஒளியின் அருகே மறைக்கும் பொருள் இருக்கும்போது, நிழலின் அளவு கூடும்.

