/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: ரத்தம் நிறம் மாறுமா...
/
அறிவியல் ஆயிரம்: ரத்தம் நிறம் மாறுமா...
PUBLISHED ON : நவ 30, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ரத்தம் நிறம் மாறுமா...
ரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. ஆனால் கடலுக்கு அடியில் பார்த்தால் பச்சை நிறத்தில் தெரியும். ரத்தம் நிறம் மாறுவதில்லை. ஒளி விலகலால் இது ஏற்படுகிறது. சூரிய ஒளியில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, வயலெட் நிறங்கள் காணப்படுகின்றன.ஒவ்வொரு நிறமும் வெவ்வேறு அலைநீளம் உடையவை. நீருக்குள்சூரிய ஒளி ஊடுருவும் போது முதலில் குறைந்த அலைநீளமுடைய சிவப்பு உறிஞ்சப்படுகிறது. இதனால் அதற்கடுத்த அலைநீளம் கொண்ட பச்சை நிறம் தெரிகிறது. இன்னும் ஆழத்துக்குச் சென்றால் பச்சை நிறமும் தெரியாது. கருப்பாக தெரியும்.

