PUBLISHED ON : டிச 18, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஜாதி ஜாதி என சொல்லி,தமிழக மக்கள் என்னை குறுகியவட்டத்தில் அடைத்து விட்டனர். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும்என்னிடம் வந்து, 'என்ன வரம் வேண்டும்' என கேட்டால், 'ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம், ஒரு சொட்டு நீர் கூட கடலுக்கு போகாத தமிழகம், எங்கும் கஞ்சாவிற்பனை செய்யாத தமிழகம் வேண்டும்' என கேட்பேன்.
டவுட் தனபாலு: இப்படி தனித்தனியா மூணு வரங்களைகடவுளிடம் கேட்பதற்கு பதிலாக, 'தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைய வேண்டும்' என்ற ஒரே வரத்தை கேட்டா போதுமே... உங்க ஆட்சி மட்டும் வந்துட்டா, இந்த மூணு வரங்களும் தமிழகத்துக்கு தானா வந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம்: திருநெல்வேலி,தென்காசி, துாத்துக்குடி உள்ளிட்டதென் மாவட்டங்களில் கனமழைபெய்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குடிசைகள், வீடுகள், உடைமைகள், வாகனங்கள் சேதத்திற்கு ஏற்ப நிவாரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
டவுட் தனபாலு: நீங்களும் முதல்வர் மற்றும் துணை முதல்வராஇருந்திருக்கீங்க... நீங்க முதல்வராக இருந்தப்ப தான், 'வர்தா' புயல் வீசியது... அதுல உயிரிழந்தவங்களுக்கு 25 லட்சம் ரூபாய் குடுத்தீங்களா...? எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலே,ஏத்துக்க முடியாத கோரிக்கையா தான் வைப்பீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,சிவா: பார்லிமென்டில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை. ஆளுங்கட்சியினர் பேசுவது மட்டும் தான், சபை குறிப்பில் இடம் பெறுகிறது; மற்றவர்கள் பேசுவது நீக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் அமளி செய்வது போன்ற தோற்றம் மட்டுமே சபைக்கு வெளியே பரப்பப்படுகிறது.
டவுட் தனபாலு: நீங்க மத்தியஅரசு மீது சொல்ற அத்தனை குற்றச்சாட்டுகளையும், தமிழக எதிர்க்கட்சிகள் உங்க கட்சி தலைமை மீது சுமத்துறாங்களே...பார்லிமென்ட்ல நீங்க சுட்டிக்காட்டுற அத்தனை குறைபாடுகளும், தமிழக சட்டசபையிலும்அச்சு பிசகாம அப்படியே நடக்குதுஎன்பதில், 'டவுட்'டே இல்லை!