PUBLISHED ON : டிச 22, 2024 12:00 AM

தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முதல்வருமான ஒமர் அப்துல்லா: ராகுலை பற்றி எனக்கு நன்கு தெரியும். முரட்டுத்தனமாகவோஅல்லது கேவலமாகவோ நடந்துகொள்வது அவரது இயல்பிலேயேகிடையாது. பா.ஜ., - எம்.பி.,யைஅவர் தள்ளியிருக்க வாய்ப்பே இல்லை. அம்பேத்கர் பிரச்னையில்இருந்து அமித் ஷாவை காக்க, பா.ஜ., இந்த திசைதிருப்பலை செய்கிறது.
டவுட் தனபாலு: சமீபத்துல தான், 'இண்டியா கூட்டணியில் காங்கிரசின் செயல்பாடுகள் சரியில்ல'ன்னு பக்கம் பக்கமா புலம்பி தள்ளியிருந்தீங்க... அதனால, உங்க மேல கோபத்துலஇருக்கிற ராகுலுக்கு இப்படி வக்காலத்து வாங்கி ஐஸ் ஒத்தடம்கொடுக்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: சினிமாவில், உச்சத்தில் இருந்த நடிகர் விஜய்,அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது.அரசியலில் ஏற்ற, இறக்கங்களைஅவர் சந்திப்பார்; துரோகிகளையும்தொடர்ச்சியாக சந்திப்பார். அதையெல்லாம் தாண்டி, அரசியலில் விஜய் நீடிக்க வேண்டும். முன்னாள் முதல்வர்கள்கருணாநிதி, ஜெயலலிதா போல்,நடிகர் விஜய் நீண்ட காலத்துக்குஅரசியல் பயணம் மேற்கொண்டால் நல்லது தான்.
டவுட் தனபாலு: நடிகர் விஜய்க்கு வரவேற்பு தர்றீங்களா அல்லது 'எங்களை மாதிரி பெரியபெரிய கட்சிகளை எதிர்த்து, நேத்து கட்சி துவங்கிய உங்களாலஜெயிக்க முடியுமா'ன்னு பயம் காட்டுறீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!
அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி: கேரள மாநில மருத்துவக் கழிவுகள், தமிழகத்தின்எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. கேரள முதல்வருடன்கைகுலுக்கி, 'போட்டோஷூட்' எடுப்பதில் மட்டும் முனைப்பாகஇருக்கும் முதல்வர் ஸ்டாலின், அண்டை மாநிலத்தின் கழிவுகள்நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக்கூட தெம்பில்லாதவராக இருக்கிறார்.
டவுட் தனபாலு: கேரள மாநில மருத்துவ கழிவுகள், தமிழக எல்லையில் கொட்டப்படுவது உங்க ஆட்சியிலும் நடந்துச்சே... அப்பவே, அதை தடுக்க உறுதியான நடவடிக்கையைநீங்க எடுத்திருந்தால், இப்ப இது தொடர்ந்திருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!