sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம், போதை ஆசாமி செயினை பறிக்க முயற்சி செய்ததோடு, பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மக்களை காக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவும் தமிழகத்தை, 'பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்' என, முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்குவது வெட்கக்கேடானது.

டவுட் தனபாலு: 'அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை, எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்குகின்றன' என, முதல்வர் தான் தெளிவாக சொல்லியிருக்காரே... ஆனாலும், 'பழவந்தாங்கலில் நீங்க நினைக்கிறா மாதிரி, ஒண்ணும் நடக்கலே'ன்னு காவல் துறை சொல்லுது... ஒரு நல்லாட்சிக்கு இதுபோன்ற சம்பவங்கள், ஒரு குடம் பாலில் துளி விஷம் என்பதில், 'டவுட்'டே இல்லை!



தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத்: மயிலாடுதுறையில் இரு இளைஞர்கள், கள்ளச்சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியதால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் இன்னும் கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது என்பதற்கு மயிலாடுதுறை சம்பவமே உதாரணம்.

டவுட் தனபாலு: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகள் நடந்ததும், 'தமிழகத்தில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இருக்கக் கூடாது' என, போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு போட்டிருந்தாரே... அவரது பேச்சை அதிகாரிகள் சீரியசாக எடுத்துக்கலையோ என்ற, 'டவுட்'தான் வருது!



பத்திரிகை செய்தி: கோவை, அன்னுார் வந்த நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜாவிடம் சில பெண்கள், 'எங்களுக்கு வீடு மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை கண்டிப்பாக வேண்டும்' என, மீண்டும் மீண்டும் கூறினர். இதனால் எரிச்சலடைந்த ராஜா, 'நான் டாடா - பிர்லா இல்லை. உங்களை போல நானும் சாதாரணமானவன் தான். எனவே திரும்ப திரும்ப இதுகுறித்து பேசாதீர்கள்' என, சிடுசிடுத்தார். ராஜாவின் பதிலால், பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டவுட் தனபாலு: அந்த பெண்கள், டாடா - பிர்லாவுக்கா ஓட்டு போட்டாங்க...? உங்களுக்கு தானே ஓட்டு போட்டு, டில்லிக்கு அனுப்பியிருக்காங்க... ஓட்டு போட மட்டும் அவங்க வேணும், உரிமைகளை கேட்க கூடாது என்றால், அடுத்த தேர்தலில் ஆப்பு அடிச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!








      Dinamalar
      Follow us