/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தாகத்தை தீர்க்க ஐந்து அம்ச திட்டங்கள்: சாதித்துக்காட்டிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
/
தாகத்தை தீர்க்க ஐந்து அம்ச திட்டங்கள்: சாதித்துக்காட்டிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
தாகத்தை தீர்க்க ஐந்து அம்ச திட்டங்கள்: சாதித்துக்காட்டிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
தாகத்தை தீர்க்க ஐந்து அம்ச திட்டங்கள்: சாதித்துக்காட்டிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
UPDATED : ஜூன் 16, 2024 10:55 AM
ADDED : ஜூன் 16, 2024 07:14 AM

பூமியில் வாழும் அனைத்து உயிரினங்கள், தாவரங்களுக்கு தண்ணீர் அவசியம். இதன் முக்கியத்துவத்தை அறிந்த திருவள்ளுவர், 'நீரின்றி அமையாது உலகு' என்றார். தண்ணீர் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் தேதி 'உலக தண்ணீர் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
பூமியில் நிலப்பகுதி 30 சதவீதம். மீதம் உள்ள 70 சதவீதம் நீர்பரப்பு தான். ஆனால், 70 சதவீத நீர் பரப்பளவில், 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீர் உள்ளது. இதிலும் குறிப்பிட்ட சதவீதம் பனிக்கட்டிகள் உள்ளன. ஆனால், கடந்த 2023ல் தென்மேற்கு, வடகிழக்கு இரண்டு பருவ மழையும் பொய்த்தது. வழக்கமான மழைக்காலங்களில் பெய்ய வேண்டிய மழையும் பெய்யவில்லை.
வறட்சி
மழை பொய்த்து போனதால், பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் காவிரி ஆற்றில் நீர் இல்லை. மற்றொரு புறம், நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதன் விளைவாக நகரில், 6,900 ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றியது. இதனால், பிப்ரவரியில் பெங்களூரில் மெல்ல தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதே வேளையில் வெயிலும் வாட்டி வதைத்தது. 'குளு குளு பெங்களூருவா இது' என்று மக்கள் ஏங்க துவங்கினர்.
மார்ச் மாதத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடி கொண்டிருந்தது. மக்கள் குடிப்பதற்கும் தண்ணீரின்றி அவதிப்பட்டனர். சிலர், வாரம் ஒரு முறை மட்டுமே குளித்த உதாரணமும் உண்டு. பள்ளி, கல்லுாரிகளிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.
தட்டுப்பாடு
ஏன், முதல்வர் அதிகாரப்பூர்வ பங்களாவான கிருஷ்ணா இல்லத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு டேங்கரில் வினியோகிக்கப்பட்டது. தண்ணீர் பிரச்னை தீர்க்கும்படி மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். அரசை திட்டித் தீர்த்தனர். 5 ரூபாய் சுத்தமான குடிநீர் மையங்களில், கேன்களுடன் நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்தனர்.
பெங்களூரு தண்ணீர் பிரச்னை, சர்வதேச அளவில் பேசப்பட்டது. ஒரு காலத்தில் தென் ஆப்ரிக்கா தலைநகர் கேப்டவுனில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது போல், பெங்களூரில் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். அப்போது தான், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் பதவியில் அமர்ந்து மூன்று மாதங்களே ஆன ராம்பிரசாத் மனோகர், பிரச்னை தீர்வு காண யோசித்தார். என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தால், தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும் என்பதை சிந்தித்தார்.
போர்க்கால நடவடிக்கை
ஏற்கனவே பல்வேறு பொறுப்புகளில் இருந்த அனுபவத்தை கொண்டு, ஐந்து அம்சங்கள் கொண்ட திட்டத்தை உருவாக்கினார். அதை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தார். இதற்காக சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து, அவர்களுக்கு ஊக்கம் அளித்தார். அதில் வெற்றியும் கண்டு, மக்களின் நன்மதிப்பையும், ஆட்சியாளர்களிடமும் நல்ல பெயரை பெற்றுள்ளார்.
நீச்சல் குளங்களுக்கு காவிரி மற்றும் ஆழ்துளைக்கிணற்று நீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. வாகனங்கள் சுத்தப்படுத்துவோர் காவிரி நீர் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குடிசை வாழ் பகுதிகளில், 500, 750, 1,000 லிட்டர் அளவு கொண்ட 500க்கும் அதிகமான டேங்கர்களை பொருத்தி, தினமும் டேங்கர்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான குடிசை வாழ் பகுதி மக்கள் பயனடைந்தனர்.
அபராதம் விதிப்பு
மேலும், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான டேங்கர்கள் மட்டுமின்றி, மாநகராட்சி, தனியார் டேங்கர்கள் மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. வழக்கமாக, 10,000 லிட்டர் கொண்ட டேங்கர் நீர், 750 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், பிரச்னையின்போது, 2,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. அத்தகையோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காவிரி நீரில் வாகனங்கள் கழுவியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. வாரந்தோறும் ஒரு மணி நேரம், தொலைபேசி மூலம், பொதுமக்கள் குறைகளை கேட்டு தீர்த்து வைக்கிறார். உச்சகட்ட தண்ணீர் பிரச்னையை, குறுகிய கால கட்டத்தில், தீர்த்து வைத்ததற்காக, ஐ.நா., சபை, மத்திய ஜல்சக்தி துறை, எப்.கே.சி.சி.ஐ.,யும் ராம்பிரசாத் மனோகரை வெகுவாக பாராட்டினர். இவர், தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன திட்டங்கள்?
-நமது நிருபர்-