/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
இருதய சிகிச்சைக்காக திருச்சியிலிருந்து அழைத்து வரப்பட்ட பச்சிளங்குழந்தை இரண்டரை மணி நேரத்தில் கோவை வருகை
/
இருதய சிகிச்சைக்காக திருச்சியிலிருந்து அழைத்து வரப்பட்ட பச்சிளங்குழந்தை இரண்டரை மணி நேரத்தில் கோவை வருகை
இருதய சிகிச்சைக்காக திருச்சியிலிருந்து அழைத்து வரப்பட்ட பச்சிளங்குழந்தை இரண்டரை மணி நேரத்தில் கோவை வருகை
இருதய சிகிச்சைக்காக திருச்சியிலிருந்து அழைத்து வரப்பட்ட பச்சிளங்குழந்தை இரண்டரை மணி நேரத்தில் கோவை வருகை
UPDATED : செப் 05, 2024 03:09 PM
ADDED : செப் 05, 2024 12:24 AM

கோவை : இருதய சிகிச்சைக்காக திருச்சியில் இருந்து இரண்டரை மணி நேரத்தில், பச்சிளங்குழந்தை கோவை அழைத்து வரப்பட்டது.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி நவகுடியை சேர்ந்த திருமுருகன், துர்காதேவி தம்பதிக்கு கடந்த, 27 ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மேல் சிகிச்சைக்காக குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இக்குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு இருப்பது தெரிந்து, சிகிச்சைக்காக கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், ஆம்புலன்சில் திருச்சி சென்றனர்.
நேற்று மதியம், 12:50 மணிக்கு குழந்தையுடன் திருச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டது.
ஆம்புலன்ஸ் தடையின்றி, கோவையை அடைய 'கிரீன் காரிடர்' வசதி ஏற்படுத்தப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதால், இரண்டரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கோவைக்கு வந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் சதாசிவம், பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை நிபுணர் சித்தார்த் ஆகியோர் கூறுகையில், 'குழந்தைக்கு இருதயத்தில் உள்ள குறைபாடு குறித்து கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை வழங்கப்படும்.
குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது சவாலான விசயம். குழந்தையை வேகமாக அழைத்து வர, போலீசார் உதவினர். குழந்தை தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளது,'' என்றனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர் மிகுந்த மகிழ்ச்சி
திருச்சியில் இருந்து ஏறக்குறைய 'பறந்து' வந்தது ஆம்புலன்ஸ் வாகனம். அதன் டிரைவர் அஸ்வின்குமார் கூறுகையில், ''குழந்தையை விரைந்து அழைத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. வழியில் வேகத்தடைகள் இருந்தன. அதுகுறித்து டாக்டர்கள் அறிவுறுத்தி, அந்த இடத்தில் வேகத்தை குறைத்து அழைத்து வர, போலீசார் உதவினர். இதுபோல் ஏற்கனவே குழந்தையை அழைத்து வந்துள்ளேன். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.