UPDATED : ஜூலை 21, 2024 02:42 AM
ADDED : ஜூலை 21, 2024 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகல்கோட் : கர்நாடக மாநிலம், பாகல்கோட் ரபகவி நகரில் வசிப்பவர் குரப்பா, 38. இவரது மனைவி பாரதி, 35. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்துக்காக ரபகவி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவருக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இதை பார்த்து டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஏன் என்றால் குழந்தைக்கு 25 விரல்கள் இருந்தன. வலது கையில் ஆறு, இடது கையில் ஏழு விரல்கள், இரண்டு கால்களிலும் தலா ஆறு விரல்கள் இருந்தன.
குரோமோசோம்கள் காரணமாக இதுபோன்ற குழந்தை பிறந்திருக்கலாம் என, மருத்துவமனையின் மகப்பேறு டாக்டர் பார்வதி ஹிரேமத் கூறியுள்ளார்.