/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது 40 நாளில் விவாகரத்து கேட்கும் புது மனைவி
/
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது 40 நாளில் விவாகரத்து கேட்கும் புது மனைவி
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது 40 நாளில் விவாகரத்து கேட்கும் புது மனைவி
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது 40 நாளில் விவாகரத்து கேட்கும் புது மனைவி
ADDED : செப் 17, 2024 01:02 AM

ஆக்ரா, கணவருக்கு தினமும் குளிக்கும் பழக்கம் இல்லாததால் கடுப்பான மனைவி, திருமணமான 40 நாளில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு, 40 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் ஆனந்தமாக துவங்கிய திருமண வாழ்க்கை சில தினங்களில் கலவரமானது.
அதிர்ச்சி
கணவருக்கு தினமும் குளிக்கும் பழக்கம் இல்லை என தெரிந்ததும், அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். உடலில் துர்நாற்றம் வீசுவதால் தினமும் குளிக்கும்படி அறிவுறுத்தினார்.
இதன் காரணமாக கணவன் - மனைவி இடையே தினமும் சண்டை நடந்துள்ளது. ஒருகட்டத்தில் நாற்றம் பொறுக்காத மனைவி, பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
கணவர் வரதட்சணை கொடுமை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் அழைத்து பேசியபோது, குளியல் விஷயம் தெரிந்து அதிர்ந்து போயினர்.
தினமும் குளிக்கும்படி அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். எனவே, விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அந்த பெண் நாடினார்.
குடும்ப ஆலோசனை பெற்று வரும்படி நீதிமன்றம் அனுப்பிவைத்தது. குடும்பநல ஆலோசகர்கள் கணவரை அழைத்து பேசினர்.
அப்போது, மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே குளிக்கும் பழக்கம் உள்ளதாகவும், மற்ற நாட்களில் கங்கை தண்ணீரை உடம்பில் தெளித்துக் கொள்வதே வழக்கம் என்றும் கணவர் தெரிவித்தார்.
ஆலோசனை
திருமணமான இந்த 40 நாட்களில் மனைவி தொல்லை தாங்க முடியாமல், ஆறு முறை குளித்ததாகவும் தெரிவித்தார். குடும்பநல ஆலோசகர்களும் ஆடிப்போயினர்.
இவர்களுக்கான குடும்பநல ஆலோசனை தொடர்ந்து நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தினமும் குளிக்கும் வரை சமரசம் கிடையாது என, அந்த பெண் உறுதியாக தெரிவித்துள்ளார்.

