/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
குழந்தைக்கு ரூ.16 கோடி உதவி கேட்கிறார் தந்தை
/
குழந்தைக்கு ரூ.16 கோடி உதவி கேட்கிறார் தந்தை
ADDED : மே 27, 2024 11:59 PM

ஓமலுார் : சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே எட்டிகுட்டப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 26. இவர், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க உறவினர்களுடன் வந்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எனக்கு, எட்டு மாதத்தில் ஷத்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. முதுகெலும்பு தசை சிதைவு என்ற அரிய வகை நோயால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. இது உயிருக்கு ஆபத்தான நோயாகும். சிகிச்சைக்காக குழந்தைக்கு, 'ஜீன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி' எனப்படும் சிகிச்சை தேவைப்படுகிறது.
இதற்காக, அமெரிக்காவில் கிடைக்கும், 'ஜோல்மென்ஸ்மா' என்ற மருந்து தேவை. மருந்து மற்றும் சிகிச்சைக்கான மொத்த மருத்துவ செலவாக, 16 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தற்போது வரை, 1.5 கோடி மட்டுமே உதவியாக கிடைத்துள்ளது. மேலும் பண உதவி தேவைப்படுவதால் அரசு துறைகள், பொதுமக்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.